வேனிற் காதையில், அகநிலை மருதமும் புறநிலை மருதமும் அருகியல் மருதமும் பெருகியல் மருதமும் நால்வகைச் சாதியும் (39-41) என்ற வரிகளில் அமைந்துள்ள இசைக் குறிப்புக்களை அரும்பதவுரையாசிரியர் மிகநன்றாக விளக்கி எழுதுகின்றார். ஆனால், அடியார்க்குநல்லார் இவ் வரிகளுக்கு விளக்கம் எதுவும் எழுதாமல் செல்கின்றார். அரும்பதவுரை இன்றேல், மேலே கண்ட வரிகளின் இசைக்குறிப்புகள் விளங்காமல் போய் இருக்கும். அரும்பதவுரையாசிரியரிடமிருந்து அடியார்க்கு நல்லார் சில இடங்களில் வேறுபடுகின்றார்; வேறு பாடம் கொள்ளுகின்றார்: மிகச் சில இடங்களில் அரும்பதவுரையாசிரியரை மறுக்கின்றார். ஆனால், “இருவரும் மாறுபட எழுதியிருக்கும் உரைகளை ஆராய்வுழிச் சில இடங்களில் அரும்பதவுரையே பொருத்தமுடையதாகக் காணப்படுகின்றது” என்பர் ந.மு. வேங்கடசாமி நாட்டார். சில இடங்களில் அடியார்க்கு நல்லார் மாறுபட்ட போதிலும் இசை நாடகப் பகுதிகளில் அரும்பதவுரையையே ஆதாரமாகக் கொண்டு விளக்குகின்றார். அரும்பதவுரை விளக்காத கலைப்பகுதியை அடியார்க்குநல்லார் விளக்காமல் விட்டுவிடுகின்றார். “அரங்கேற்று காதையில் குழலாசிரியர் அமைதியும் யாழாசிரியன் அமைதியும் கூறுவதற்கு எழுந்த இன்றியமையாத இசையிலக்கணப் பகுதிகளில் அரும்பதவுரையில் உள்ளவற்றினும் வேறாக ஒரு சொல்தானும் எழுதப்படாமை அறியற்பாலது. அடியார்க்கு நல்லார் இவ்விடங்களில் அரும்பதவுரையைப் பட்டாங்கு பெயர்த்தெழுதி, சொல் முடிபு தானும் காட்டாது விட்டிருப்பது வியப்பிற்குரியதே. இவ்வாற்றால் அரும்பதவுரையாசிரியர் விரியாதுவிடுத்த விலக்குறுப்பு முதலியவற்றை அடியார்க்கு நல்லார் பிறநூல் மேற்கோள் கொண்டு விரித்துக்காட்டி இருப்பினும். நுட்பமாகிய இசைநாடகப் பகுதிகளை விளக்குதற்கு முயன்ற வகையால் அரும்பத வுரையாசிரியருக்கே அனைவரும் கடமைப்பாடு உடையவர் ஆவர்” என்று கூறுகின்றார் ந.மு. வேங்கடசாமி நாட்டார். எந்தச் சிலம்பு? பாண்டியன் அவையில் வழக்குரைத்து, தன் கணவன் கள்வன் அல்லன் என்று மெய்ப்பிக்க, கண்ணகி உடைத்த |