பக்கம் எண் :

455ஆய்வு

சமயத்தவர் என்பர். ‘பிறவா யாக்கைப் பெரியோன்’ (சிலப் 5-169) என்ற
அடிக்கு ‘என்றும் பிறவாத யாக்கையுடைய இறைவன்’ என்று இவர்
எழுதுகின்றார். சிவன் என்று குறிக்க வேண்டிய இடத்தில் ‘இறைவன்’ என்று
பொதுப்பெயரைக் குறித்திருப்பதால் சிவபெருமானையே இறைவனாகக்
கொண்டவர் இவர் என்பர்.

உரையின் இயல்பு

    முத்தமிழ்க் காப்பியம் என்று போற்றப்பெறும் சிலப்பதிகாரத்திற்கு உரை
இயற்றிய இவரை,

     ஓரும் தமிழொரு மூன்றும் உலகின் புறவகுத்துச்
     சேரன் தெரித்த சிலப்பதி காரத்திற் சேர்ந்தபொருள்
     ஆரும் தெரிய வித்துரைத்தான்

என்று கூறுகின்றது. சிறப்புப்பாயிரச் செய்யுள் ஒன்று. ‘பருந்தும் நிழலும் என,
பாவும் உரையும் பொருந்த எல்லாப் பொருளும் தெரிந்து நல்லமிர்தம்
பாலித்தான்’ என்று மற்றொரு செய்யுள் இவரைப் போற்றுகின்றது.

    பருந்தும் நிழலும்எனப் பாவும் உரையும்
    பொருந்துநெறி எல்லாப் பொருளும் - தெரிந்துஇப்
    படியார்க்கு நல்அமிர்தம் பாலித்தான் நன்னூல்
    அடியார்க்கு நல்லான்என் பான்

என்ற செய்யுள், சிலப்பதிகாரத்திற்கு இவர் உரை இயற்றியதை உலக
மக்களுக்கு நல்லமிர்தம் பாலித்ததாய்ப் போற்றுகின்றது.

     அடியார்க்கு நல்லார் அவையடக்கமாக,

     எழுத்தின் திறன்அறிந்தோ இன்சொற் பொருளின்
     அழுத்தம் தனில்ஒன்று அறிந்தோ - முழுத்தும்
     பழுதற்ற முத்தமிழன் படாற்கு உரைஇன்று
     எழுதத் துணிவதே யான்

என்று கூறுவதாய் உள்ளது. ஆனால், இவர் எழுத்தின் திறன் அறிந்தவர்;
இன்சொற் பொருளின்  அழுத்தம் அறிந்தவர்; பழுதற்ற முத்தமிழன் பாடற்குச்
செவ்விய உரை கண்டவர் என்பதை இவரது உரையே நன்கு உணர்த்தும்.

     சிலப்பதிகாரத்தின் அருமை பெருமைகளை எல்லாம் இவரது
உரையால்தான் தமிழகம் நன்கு அறிந்தது. இவரது உரை இல்லாமல் போய்
இருந்தால்  எத்தனையோ அரிய செய்திகள் வெளிப்படாமல் மறைந்து
இருக்கும். முத்தமிழ் வித்தகராகிய இவர் பண்டைத் தமிழ் இலக்கண
இலக்கியங்களில் ஊறித் திளைத்தவர்; சிறப்பாக உரை இயற்றும் திறன்
வாய்ந்தவர். இவரது உரையின் வாயிலாகப் பழந்தமிழரின் பல திறப்பட்ட
கலை