தொலைவை (காடுகாண்-42)’ ஆறைங் காதம்’ என்று கோவலன் கூறுதல், நாடுகாண் காதையில் (153-155), ஊரிடை இட்ட நாடுடன் கண்டு காவதம் அல்லது கடவார் ஆகி, பன்னாள் தங்கிச் செல்நாள் என்று இளங்கோ அடிகள் கூறுதல், கட்டுரை காதையில், ஆடித் திங்கள் பேரிருள் பக்கத்து அழல்சேர் குட்டத்து அட்டமி ஞான்று வெள்ளி வாரத்து ஒள்ளெரி யுண்ண உரைசால் மதுரையோடு அரைசு கேடுறும் என்று மதுராபதி கூறுதல் ஆகிய குறிப்புகளை நுணுகி ஆராய்ந்து அடியார்க்குநல்லார், கதை நிகழ்ச்சிகளைக் காலத்துடன் சேர்த்துக் காணுகின்றார். நாடுகாண் காதையில், வான்கண் விழியா வைகறை யாமத்து மீன்திகழ் விசும்பின் வெண்மதி நீங்கக் காரிருள் நின்ற கடைநாள் கங்குல் (1-3) என்ற அடிகளுக்குப் பொழிப்புரை எழுதியபின் விரிவாகக் கால ஆராய்ச்சியில் ஈடுபடுகின்றார். “வைகறை என்னும் யாமத் திடத்து, வெண்மதியானது விசும்பினின்றும் நீங்கிற்றாகக் கரிய இருள் கடைக்கண் நின்ற கங்குற் பொழுது” என்று உரை கூறி, என்பது அந்தச் சித்திரைத் திங்கள் பகுதி நாள்-சோதி, திதி-மூன்றாம் பக்கம், வாரம்-ஞாயிறு. இத் திங்கள் இருபத்தெட்டில் சித்திரையும் பூரணையும் கூடிய சனிவாரத்தில் கொடியேற்றி ‘நாலேழ் நாளினும்’ (மணி 1:8) என்பதனான் இருபத்தெட்டு நாளும் விழா நடந்து கொடியிறக்கி வைகாசி இருபத்தெட்டினிற் பூருவ பக்கத்தின் பதின் மூன்றாம் பக்கமும் சோமவாரமும் பெற்ற அனுடத்தில் நாட்கடலாடி ஊடுதலின் வைகாசி இருபத்தொன்பதில் செவ்வாய்க்கிழமையும் கேட்டையையும் பெற்ற நாசயோகத்து நிறைமதிப் பதினாலாம் பக்கத்து வைகறைப் பொழுதினிடத்து நிலவுபட்ட அந்தரத்து இருளிலே என்றவாறு. அது பூர்வ பக்கமென்பது தோன்ற, “காரிருள் நின்ற கடை நாள் கங்குல் என்றார்” என்று காலத்தை ஆராய்ந்து முடிவு செய்கின்றார். காடுகாண் காதையில் (9) ‘அன்று, அவர் உறைவிடத்து அல்கினர்’ என்பதற்கு விளக்கம் கூறுகையில், ‘இங்ஙனம் கூறியது, ‘ஆறைங் காதம்’ (10:42) என்றமையானும், ‘காவதம் அல்லது |