பக்கம் எண் :

உரையாசிரியர்கள்474

செய்தியோ கூறப்படவில்லை. அடியார்க்குநல்லார் கூறும் செய்தி மேலும்
ஆராய்தற்குரியது.

     அடைக்கலக் காதையில் கூறப்படும் கீரியைக் கொன்ற பார்ப்பனத்தி
கதையில் (54-75) அவள் கணவன் தந்த ‘வடமொழி வாசகம் செய்த
நல்லேடு’ கூறும் செய்தியாக, பஞ்ச தந்திரம் என்ற வடமொழி நூலிலிருந்து
சுலோகத்தை எடுத்துக் காட்டுகின்றார்.1

       வடமொழியில் உள்ள பஞ்ச தந்திரம் கூறும் கீரியைக் கொன்ற
பார்ப்பனத்தி கதையும் சிலப்பதிகாரம் கூறும் கதையும் ஒன்றே என்பது
அடியார்க்குநல்லார் கருத்துப் போலும்! இதே கருத்தில் ச.வையாபுரிப்
பிள்ளை பஞ்ச தந்திரத்திற்குப் பின்னால் தோன்றியது சிலப்பதிகாரம் என்பர்.

     அடைக்கலக் காதையில் கனா நூலையும் (95-106), கொலைக்களக்
காதையில் (162-5) களவு நூலையும் குறிப்பிடுகின்றார்.

     ‘கொன்றையன்’ என்ற திருக்கோவையார் (400) பாடலையும் இவர் 
மேற்கோள் காட்டுகின்றார். (கொலை 148-53).

     சங்க நூல்களிலிருந்தும், மணிமேகலை, சிந்தாமணி, வளையாபதி,
பெருங்கதை முதலிய காப்பியங்களிலிருந்தும் புறப்பொருள் வெண்பாமாலை
போன்ற இலக்கணங்களிலிருந்தும் இவர் பல மேற்கோள் தருகின்றார்.

பல்கலைப் புலமை

     இளங்கோ அடிகள் பல கலைகளை நுணுகிக் கற்ற கலைச்செல்வர்.
சிலப்பதிக்காரத்தில் தொட்ட இடமெல்லாம் கலைமணம் கமழும். இளங்கோ
அடிகள் முத்தமிழ் கற்றுத் துறைபோகிய வித்தகர். அவர் நூலுக்கு உரை
இயற்றிய அடியார்க்குநல்லார், அவரது புலமைப் பரப்பைக்  கண்டு
வியந்தவர். அவர் கூறும் கலைகளை விளங்கிக் கொண்டவர்.

     அடியார்க்குநல்லார் அரங்கேற்று காதைக்கு எழுதியுள்ள விளக்கம்
நுண்கலைக் களஞ்சி யம். அது அருங்கலைகளின் உறைவிடம். அக்
காதையின் உரையில் கூத்தி, ஆடலாசிரியர், இசையாசிரியர், கவிஞர்,
தண்ணுமையோன், யாழாசிரியன், ஆகியோருடைய அமைதியும், அரங்கின்
இலக்கணம், தலைக்கோல் அமைதி, அரங்கிற் புகுந்து ஆடுகின்ற இயல்பு
ஆகியவையும் மிகச் சிறப்பாக - விளக்கமான மேற்கோள்களுடன்
உரைக்கப்படுகின்றன.

     இந்திரவிழவூர் எடுத்த காதையில் ஆடை அணிமணிகளின் வகைகள்
கூறப்படுகின்றன.


1. பஞ்சதந்திரம்; 15:18 ஸ்லோகம்.