பக்கம் எண் :

உரையாசிரியர்கள்478

ஆழ்வார்கள் பன்னிருவரும், திருமாலை வணங்கி வாழ்த்தி அவரது
பெருமைகளைப் புகழ்ந்து பாடிய பாடல்கள், திவ்வியப்பிரபந்தம் எனப்பட்டன.

     ஆழ்வார்களின் அருட்கவிகள் நாதமுனிகளால், ஒன்பதாம்
நூற்றாண்டின் முற்பகுதியில் தொகுக்கப்பட்டன. நாதமுனிகள் அவற்றைத்
தொகுத்த வரலாறு சுவையானது.

நாதமுனிகள்

     வாழ்க்கைப் பாதையில் ஒரே சீராய் - அமைதியாய்ச் சென்று
கொண்டிருக்கிறான் மனிதன். அவனுடைய பாதையில் யாரோ சிலர்
குறுக்கிட்டு அவனைத் தடுத்துத் திசை திருப்பி விடுகின்றனர். அவனுடைய
பாதையின் இடையே நிகழ்கின்ற சில நிகழ்ச்சிகள் அவனை ஆட்கொண்டு
அவன் பாதையை மாற்றி விடுகின்றன. எதிர் பாராத வகையில் தோன்றும்
சில சூழல்களால், வாழ்க்கை பலவாறாகப் பிரிந்து விடுகின்றது. மனிதன் தான்
வந்த வழியிலிருந்து விலகி ஏதேனும் ஒரு வழியில் செல்லத்தொடங்கி
விடுகிறான்.

     வாழ்க்கைப் பாதையைப் பின் நோக்கித் திரும்பிப் பார்த்தால்,
இத்தகைய அனுபவம் ஒவ்வொரு மனிதனுக்கும் ஏற்பட்டிருப்பது புலனாகும்.
பேராற்றலும் பேரறிவும் செயற்கரிய செய்யும் திறனும் படைத்தவர்
வாழ்க்கைப் பாதையில் ஏற்படுகின்ற மாறுதல்கள் நாட்டு வரலாற்றையே
மாற்றுகின்றன; மக்களினத்தின் போக்கை மாற்றுகின்றன; மனித குலச்
சிந்தனையை - பழக்க வழக்கங்களை - பண்பாட்டை மாற்றுகின்றன.
இத்தகைய நல்லதொரு மாறுதல் நாதமுனிகனிள் வாழ்க்கையில் நிகழ்ந்தது.

     நாதமுனிகள் வைண சமயச் சான்றோர். இவர் தென்னார்க்காடு
மாவட்டத்தில் (சிதம்பரம் வட்டத்தைச் சேர்ந்த) காட்டுமன்னார் கோயில்
என்னும் வீர நாராயணபுரத்தில் கி.பி. 825இல் தோன்றினார். திருமாலிடம்
பக்தி கொண்டு, அவ்வூரில் உள்ள மன்னனார் கோயிலுக்குப் பூந்தோட்டம்
அமைத்துப் பூசை செய்து வந்தார்.

வாழ்வில் ஒருநாள்

    நாதமுனிகள் ஒருநாள் மன்னனார் கோயிலில் வழிபாடு செய்து
கொண்டிருந்தபோது, மைசூர் நாட்டிலிருந்து வந்த வைண அடியவர் சிலர்
பின்வரும் பாடலைப் பாட தொடங்கினர்:

    ஆரா அமுதே! அடியேன் உடலம் நின்பால் அன்பாலே
    நீராய் அலைந்து கரைய உருகு கின்ற நெடுமாலே!