பக்கம் எண் :

உரையாசிரியர்கள்480

4000 பாடல்கள்

     ஆழ்வார்கள் பாடிய பாடல்கள் நாலாயிரம் என்று கூறி வந்தாலும்
அவற்றின் எண்ணிக்கை 3776 ஆகும். ஆழ்வார்கள் பன்னிருவர் பாடிய
பாடல்களின் விவரம் கீழே தரப்படுகின்றது.

1.
2.
3.
4.

5.



6.
7.
8.
9.

10.

11.
பொய்கையாழ்வார் - முதல் திருவந்தாதி
பூதத்தாழ்வார் - இரண்டாம் திருவந்தாதி 
பேயாழ்வார் - மூன்றாம் திருவந்தாதி 
திருமழிசையாழ்வார்திருவந்தாதி
                 திருச்சந்தவிருத்தம் 
நம்மாழ்வார் திருவிருத்தம்
           திருவாசிரியம் 
           பெரியதிருவந்தாதி 
           திருவாய்மொழி 
மதுரகவியாழ்வார்    - கண்ணிநுண் சிறுத்தாம்பு
குலசேகரஆழ்வார் - திருமொழி 
பெரியாழ்வார்- பெரியாழ்வார் திருமொழி 
ஆண்டாள்திருப்பாவை
          நாச்சியார்திருமொழி 
தொண்டரடிப்பொடியாழ்வார் - திருமாலை
                          திருப்பள்ளிஎழுச்சி 
திருப்பாணாழ்வார்- அமலனாதி பிரான் 
100
100
100
96
120
100
70
87
1102
10
105
473
30
143
45
10
10
12. திருமங்கையாழ்வார்பெரிய திருமொழி 
                 திருக்குறுந்தாண்டகம்
                 திருநெடுந்தாண்டகம் 
                 திருவெழுகூற்றிருக்கை
                 சிறியதிருமடல் 
                 பெரியதிருமடல் 
1084
20
30
1
1
1
  மொத்தம் 3776

     இவை ஏறக்குறைய நாலாயிரம் இருத்தலால் நாலாயிர திவ்வியப்
பிரபந்தம்  எனப்பட்டன. சிலர், சிறிய திருமடலின் கண்ணிகளை 77
1/2
ஆகவும், பெரிய திருமடலின்  கண்ணிகளை 1841/2 ஆகவும் எண்ணிக்
கணக்கிட்டு நாலாயிரம் எனக் கொள்வர்.

     இப் பிரபந்தம் ஆழ்வார்களின் கால வரிசைப்படி தொகுக்கப்படவில்லை.

     இராமாநுச நூற்றந்தாதியை நாதமுனிகள் காலத்திற்குப் பின்,
ஆழ்வார்களின் பாடலுக்கு இறுதியில் சேர்த்தனர்.