பக்கம் எண் :

495ஆய்வு

ஆகிய முப்பத்திரண்டு எழுத்து” என்பது யாப்பருங்கலக் காரிகை தருகின்ற
விளக்கம்.

     ஆறாயிரப்படி என்பது, 6000x32 எழுத்துக்களைக் கொண்டதாகும்.
இவ்வாறே ஏனையவற்றிற்கும் கணக்கிட்டுக் கொள்ள வேண்டும்.

திருவாய்மொழி வியாக்கியானங்கள்

    திருவாய்மொழி வியாக்கியானங்கள் வைணவர்கள் ‘பகவத் விஷயம்’
என்று கொண்டு அவற்றைப் பிரமாண வாக்கியமாகக் கருதிப் பெரிதும்
போற்றிவருகின்றனர். இவ்வுரைப் பெருங்கடலில் நீந்த முயல்பவர், பெரும்
பயன் பெறுவர். இவற்றைச் சமய நோக்குடன் கற்றாலும் இலக்கியமாக
எண்ணிக் கற்றாலும் பயன் மிகவும் உண்டாகும். இவ்வுரையாசிரியர்களிடம்
தீவிரமான வைணவ பக்தியும், இருமொழிப் புலமையும் உண்டு. அளவற்ற
அறிவாற்றலும் உரை எழுதும் வன்மையும் இவர்களிடம் உண்டு. தமிழ்
மொழியிலும்
ஆழ்வார்களின் பாடல்களிலும் தமக்கிருக்கும் அளவற்ற
ஈடுபாட்டை ஆங்காங்கே வெளிப்படத்திச் செல்கின்றனர்.

6000 படி

     நாதமுனிகள் காலம் முதல் இராமானுசர் காலம்வரை, திருவாய்
மொழிக்கு வாய்மொழி வாயிலாகவே உரைகள் கூறப்பட்டுவந்தன.
ஆறாயிரப்படியே முதன் முதலில் எழுத்து வடிவில் தோன்றிய
திருவாய்மொழி வியாக்கியானம். இதுவே பிற்கால வைணவ உரைகளுக்குத்
தோற்றுவாய்.

     இதனை இயற்றியவர். ஆளவந்தாரின் சீடராகிய பெரிய திருமலை
நம்பியின் புதல்வரான பிள்ளான் என்பவர். பிள்ளான் 1062 இல்
தோன்றினார். இவர் இராமானுசரின் உள்ளங்கவர்ந்த நன் மாணாக்கர்;
ஆசானின் குறிப்பறிந்த நடந்து கொண்ட சீலர்.

     இராமானுசரின் கட்டளையை மேற்கொண்டு இவர், 6000படி என்ற
வியாக்கியானம் இயற்றினார். இவரது வியாக்கியானத்தைக் கண்டு மகிழ்ந்த
இராமானுசர் இவருக்கு (நம்மாழ்வார்  நினைவாக) ‘திருக்குருகைப் பிரான்’
என்று பெயரிட்டார். 6000 படியின் பெருமையையறிந்து, “யாம் செய்த ஸ்ரீ
பாஷ்யத்தைப் போலவே, இதுவும் காலட்சேபத்தில் வைக்கப்படுவதாக!”
என்று பணித்தார் இராமானுசர்.

     பிள்ளானை 74 சிம்மாசனாதிபதிகளுக்கு முதல்வர் ஆக்கினார்.
இராமானுசரின் ஞானபுத்திரர் ஆனார். இறுதிக்