காலத்தில் பிள்ளான் மடியில் தலை வைத்து, இராமானுசர் திருநாட்டுக்கு எழுந்தருளினார். பிள்ளானின் உரையை, தெள்ளாரும் ஞானத் திருக்குரு கைப்பிரான் பிள்ளான் எதிராசர் பேரருளால் - உள்ளாரும் அன்புடனே மாறன் மறைப்பொருளை அன்றுரைத்தது இன்பமிகும் ஆறா யிரம் என்று மணவாள மாமுனிகள் போற்றுகின்றார். பிள்ளான் 6000 படி விளக்கவுரையில் ‘இராமானுசர் தம் நூல்களில் எழுதியுள்ள வடமொழித் தொடர்களை அப்படியே எடுத்து வைத்து எழுதுகிறார். ஆளவந்தாருடைய தோத்திர ரத்தினக் கருத்துகளையும் எடுத்து அமைத்திருக்கிறார். சில பாடல்களுக்குக் கருத்தை மட்டும் கூறுவார். சிலவற்றில் பதங்களுக்கு அன்னுவயம் காட்டி முடிப்பார். சில பாடல்களில் சுருக்கமாக ஒரே வரியில் உரை எழுதுகின்றார். வடமொழித் தொடர்களை, தமிழ் உருபுகளையும் வினைகளையும் கொண்டு முடிக்கிறார். அன்றியும் ஒவ்வொரு திருமொழியிலும் முன்வந்த பாசுரங்களோடு தொடர்புபடுத்தி எழுதுவது இவர் இயல்பு. ஒரு திருமொழியில் சில பாடல்களக்கு விரிவான மேற்கோள்களைக் காட்டி மற்றவற்றைச் சுருக்கிச் சொல்வதும் இவருடைய மற்றோர் இயல்பு’.* 9000 படி இதனை இயற்றியவர் நஞ்சீயர் (1182-1287). இவர், கூரத்தாழ்வானின் மைந்தராகிய பராசர பட்டரின் சீடர். மைசூரை அடுத்துள்ள மேனாட்டில் இவர் பிறந்தார். திருவாய்மொழிக்குப் பிள்ளான் எழுதிய ஆறாயிரப் படியை விரிவுபடுத்தி, நஞ்சீயர் சொற்பொழிவு செய்தார். நஞ்சீயர் அத்வைதத்தில் தேர்ந்தவர்; திருவரங்கத்தில் வாழ்ந்தவர்; வேதாந்தக் கடலை நீந்தியவர். இவரது இயற்பெயர் மாதவாசார்யா. நஞ்சீயர் கூறிவந்த வியாக்கியானங்களில் ‘ஒன்றும் தப்பாமல் பதறாமல் கேட்டுத் தரித்து இராமுற்ற எழுதி, கால் கொம்பு சுழி’ ஏறாமல் அப்படியே எழுத்து வடிவில் தந்தவர் நம்பிள்ளை. இவரது இயற்பெயர் வரதராசர். பட்டர் மறைவுக்குப் பின், நஞ்சீயர் ஆசாரியர் பதவி ஏற்றார். தாம் விரிவுபடுத்தியுள்ள வியாக்கியானத்தைத் திருத்தமானபடி * மு. அருணாசலம், தமிழிலக்கிய வரலாறு (12 நூற். II) பக். 758. |