ஒன்று எடுக்குமாறு தம் மாணவர் நம் பிள்ளையிடம் தந்தார். நம்பிள்ளை காவிரியின் தென்கரையில் உள்ள நம்பூரில் வாழ்ந்து வந்தார். நம்பிள்ளை, திருவரங்கத்தில் நஞ்சீயரிடமிருந்து ஓலைச் சுவடியைப் பெற்றுக்கொண்டு தம் ஊர்க்குச் செல்லக் காவிரியில் இறங்கினார். காவிரியில் வெள்ளம் மிகுதியாக வரவே ஓலைச் சுவடி கைதவறி ஆற்று வெள்ளத்தில் விழுந்து மறைந்து போய் விட்டது. ஓலைச்சுவடியை இழந்த நம்பிள்ளை, பெரிதும் வருந்தித்தம் ஊருக்குச் சென்று, தாமே திருவாய்மொழிக்குப் புதியதொரு விளக்கம் எழுதினார். எழுதி முடித்து விட்ட பின் தாம் எழுதிய விளக்கத்தை ஆசிரியரிடம் கொண்டு வந்து காட்டினார். நஞ்சீயர், அதனைப் பிரித்துப் பார்த்தபோது, பல புதிய விளக்கமும் கருத்தும் அதில் சேர்ந்திருந்தன. அவற்றைக் கண்ட நஞ்சீயர் காரணம் கேட்டார். நம்பிள்ளை, நடந்தவற்றை எல்லாம் ஒன்றும் மறைக்காமல் கூறி வருந்தினார். நம்பிள்ளையின் விளக்கம் மிகவும் சிறப்பாய் இருப்பதை அறிந்து அவரது புலமைத் திறனைப் போற்றி உரையை ஏற்றுக் கொண்டார்.* இவ்வாறு நம்பிள்ளை எழுதிய விளக்கமே 9000 படியாகும். இந்த விளக்கத்தை நம்பிள்ளை எழுதி இருந்தாலும், நஞ்சீயர் பெயரால் இது வழங்கி வருகின்றது. 9000 படியை உபதேச ரத்தினமாலை (43), தஞ்சீரை ஞானியர்கள் தாம்புகழும் வேதாந்தி நஞ்சீயர் தாம்பட்டர் நல்லருளால்-எஞ்சாத ஆர்வமுடன், மாறன் மறைப்பொருளை ஆய்ந்துஉரைத்தது ஏர்ஒன் பதினா யிரம் என்று போற்றுகின்றது. 24000 படி ஆசான் என்ற சொல்லுக்கு ஆசிரியன் என்பது பொருள். இச் சொல் ஆச்சான் என்று வழங்கும். பெரிய ஆசான் என்ற தொடர் பெரியவாச்சான் என்று ஆயிற்று. பெரியவச்சான் பிள்ளை, நம்பிள்ளையின் அன்பிற்குரிய மாணவர். குடந்தை அருகே உள்ள சேங்கநல்லூரில் பிறந்தவர்; திருவரங்கத்தில் தங்கிப் பணிபுரிந்தவர். பல நூல்களைக் கற்றறிந்த பெரும்புலவர். 70 * பார்க்க, பிற்சேர்க்கை - 6 |