ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்தவர். நீண்ட தம் வாழ்நாளில் பல அரிய எழுத்துப் பணிகளைப் புரிந்தவர். பெரியவச்சான் பிள்ளையின் கல்விமாண்பை அறிந்த நம்பிள்ளை, திருவாய்மொழிக்குப் பெரியதொரு வியாக்கியானம் எழுதுமாறு பணித்தார். அதன் விளைவாய்த் தோன்றியது 24000 படி. நம்பிள்ளை தம்முடைய நல்லருளால் ஏவியிட பின்பெரிய வாச்சான்பிள் ளையதனால் - இன்பா வருபத்தி மாறன் மறைப்பொருளைச் சொன்னது இருபத்து நாலா யிரம். என்று இதன் வரலாற்றை உபதேச ரத்தின மாலை கூறுகின்றது. பெரியவச்சான் பிள்ளை, நாலாயிர திவ்வியப்பிரபந்தம் முழுமைக்கும் வியாக்கியானம் இயற்றி, ‘வியாக்கியான சக்ரவர்த்தி’ என்னும் சிறப்புப் பெயர் பெற்றார். ‘பழநடை விளக்கம்’ என்னும் நூல், பெரியவாச்சான் பிள்ளையின் வியாக்கியானங்களைப் பின் வருமாறு புகழ்கின்றது: “திவ்வியப் பிரபந்த தாத்பரியங்களை அறிகைக்கு, பெரியவாச்சான்பிள்ளை செய்தருளின் வியாக்கியானங்களை ஒழிய வேறு கதி இல்லை. ஆகையால், ஸ்ரீ வைஷ்ணவர்கள் எல்லாரும் பெரியவச்சான் பிள்ளை சம்பந்தம் பெற்று, அவருக்குச் சிஷ்ய கோடியாய் இருப்பார்கள்”. திவ்வியப் பிரபந்தம் வியாக்கியானம் முழுவதிலும் பெரியவச்சான் பிள்ளையின் உயிர் நாடி துடிக்கின்றது. இவரது எழுத்துக்கள் யாவும், வைணவ சமய உண்மையின் கருவூலமாய்க் காட்சியளிக்கின்றன. மாபெரும் உண்மைகளுக்கும் கொள்கைகளுக்கும் இடையே கவிதைத் திறனோடு கூடிய புலமை மாண்பு ஊடுருவிச் செல்லுகின்றது. இவரதுவாக்கு சிறந்த உயிர்த்துடிப்பை உண்டாக்கி ஆழ்வார்களின் பாடல்களுக்குப் புதியதோர் அழகைத் தருகின்றது. இவரது மேதைமையும் உள்ளப்பாங்கும், பிரபந்த உலகின் இருண்ட பகுதிகளில் மின்னலைப் போல் ஊடுருவிச் சென்று பேரொளி வீசுகின்றன. இவரது உதவியால் ஆழ்வார்களின் இதய ஒலியைக் கேட்கின்றோம்; ஆசாரியார்களின் திருவுள்ளப் பாங்கினைக் காண்கின்றோம். அவற்றோடு இணைந்து செல்லும் பெரியவச்சான் பிள்ளையின் உள்ளத்தை அறிந்து இன்புறுகிறோம். இராமாயணப் புலமை பெரியவச்சான் பிள்ளை, வடமொழியில் உள்ள வால்மீகி இராமாயணத்தில் மிகுந்த ஈடுபாடு உடையவர்; அக் |