பக்கம் எண் :

499ஆய்வு

காவியத்தைக் கற்றுப் பெரும் புலமை பெற்றவர். தம் உரைகளில் பல
இடங்களில் வால்மீகி காவியத்தை மேற்கோள்காட்டுகின்றார்.

     இவர் காலத்தில் வாழ்ந்த வேதாந்த தேசிகர் வால்மீகி
இராமாயணத்தை மொழி பெயர்க்க விரும்பினார். சில சுலோகங்களுக்கு
‘அபய பிரதான சாரம்’ என்ற பெயரில் தமிழாக்கம் செய்து வந்தார்.
அப்போது பெரியவச்சான்பிள்ளை, தம் வியாக்கியானத்தில் வால்மீகி
இராமாயணத்தை மேற்கோள்காட்டி விளக்கி வருவது அறிந்தார்.
அவற்றைப் படித்துப்பார்த்தபின் வேதாந்த தேசிகர் தாம் எழுதி இருக்கும்
விளக்கம்யாவும் “சோழியன் உமிழ்ந்த சக்கை’ என்று கூறினார்.

     பெரியவச்சான் பி்ள்ளை, சோழநாட்ட அந்தணர் ஆதலின் இவரை,
சோழியன் என்று தேசிகர் குறிப்பிட்டார்.

கம்பர் தமிழ்

    கவிச் சக்கரவர்த்தியாகிய கம்பர், நஞ்சீயர் காலத்தில் வாழ்ந்தவர் என்பர்.
வைணவ உரைகள் பல தோன்றி, விளக்கத்திற்கு விளக்கம் - உரைக்கு உரை
என்று விரிவடைந்த காலத்தில் வைணவ சமயக் கருத்தும், இலக்கியமும்
நாடெங்கும் பரவின. இராமானுசரும் அவரது வழித்தோன்றல்களும் வால்மீகி
இராமாயணத்தைத் தமிழ் நாடெங்கும் கதா கலாட்சேப வாயிலாகப் பரப்பி
வந்தனர். இராமானுசரை அமுதனார். ‘படி கொண்ட கீர்த்தி இராமாயணம்
என்னும் பக்தி வெள்ளம் குடிகொண்ட கோயில்’ என்று பாராட்டுகின்றார்.
வைணவ அடியார்கள்  பரப்பி வந்த இராமாயணம் என்னும் பக்தி வெள்ளம்
தமிழ் மக்கள் நெஞ்சில் பாய்ந்தது. எங்கும் இராமன் கதை பேசப்பட்டது.
இராமன் புகழ் தமிழகமெங்கும் மண்டிக்கிடந்தது.

     இத்தகைய சூழலில்தான் கம்பர் தோன்றினார். இராமன் கதையைப்
பாடினார் கம்பராமாயணம் வைணவ ஆசாரியர்களின் காலத்திலேயே தமிழ்
நாடெங்கும் பரவத் தொடங்கியது. பெரியவச்சான் பிள்ளை காலத்தில், கம்பர்
காவியம் கற்றவர் உள்ளத்தில் இடம் பெற்றது. கம்பர் பாடல்கள் இரண்டைப்
பெரிய வாச்சான் பிள்ளை, தம் உரையில் மேற்கொண்டுள்ளார்.

     ‘மஞ்சுலாம் சோலை வண்டறை மாநீர்’ என்னும் திருவாய் மொழிப்
பாடலுக்குப் பெரியவாச்சான் பின்வருமாறு விளக்கம் கூறிகின்றார்:

     “வண்டறை  என்கிறது சோலைக்கு அடைமொழியாகவும், மாநீர்க்கு
அடைமொழியாகவும் ஆம். ஐலத்தினுடைய