கொள்ளலாம் அன்றோ? ஆனபின்னர், அவனுடைய உடைமை இவை எல்லாம் என்னும் நினைவே வேண்டுவது, தானும் அதற்குள்ளே ஒருவனாகச் சேரலாம் என்கின்றார்.” உரையால் அறியும் செய்திகள் ஈட்டு உரை பலவகையான அரிய செய்திகளை நமக்கு அறிவிக்கின்றது. அதில் இடம்பெற்றுள்ள பல நூறு உவமைகளில் எத்தனையோ செய்திகள் அடங்கியுள்ளன. மன்னர்களைப்பற்றிய குறிப்புகள் அரசர்கட்கு நாடெங்கும் தமது ஆணை செல்லுமாயினும் தங்கள் தேவியரும் தாங்களுமாகப் பூந் தோட்டங்கள் சிலவற்றைக் குடநீர் வார்த்து ஆக்குவது அழிப்பதால் விளையாட்டின்பம் துய்க்குமாறு போன்று- அரச குமாரன் அழுகு சிறையிலே கிடந்தால், முடி சூடி அரசை நடத்துவதிலும் சிறை விடுகைதானே பயனாக இருக்குமாறு போன்று- இராஜாக்கள் இராஜதுரோகம் செய்தவர்களை நலிகைக்கு வேற்காரரை வரவிடுமாறு போன்று- செடி சீய்த்துக் குடியேற்றின படைவீடுகளை விடாதே இருக்கும் அரசர்களைப் போன்று- இராஜாக்கள் அந்தப்புரத்தில் ஒரு கட்டில் நின்றும் மற்றைக் கட்டில் ஏறப்போகா நிற்க் அந்தரங்கர் நடுவே முகங்காட்டித் தம் காரியம் கொண்டு போமாறு போன்று- சிறையிலே இருந்த இராஜ குமாரன் தலையிலே முடியை வைத்துப் பின்னைச் சிறையை வெட்டிவிடுவாரைப் போன்று- அரச குமாரர்கட்கு உரிய அவ்வக் காலங்களில் வெள்ளிலை இடாதபோது அவர்கள் வருந்துவார்கள்; அது போன்று- அரசனுடைய சந்நிதியில் கூனர் குறளர்களாய் வசிப்பது போன்று- நாகரிகம், பழக்கவழக்கம் முதலியன செப்பிலே கிடந்த ஆபரணத்தை வாங்கிப் பூண்டு பின்னையும் அவ் ஆபரணத்தை வாங்கிச் செப்புக்குள்ளே இட்டு வைக்குமாறு போன்று- கெடுமரக்கலம் கரை சேர்ந்தாற் போன்று- |