இருகை முடவனை யானை ஏறு என்றால் அவனால் ஏறப்போகாதது போன்று- ஒருவன் ஒருவனை, “உனக்கு ஒரு மாத ஜீவனத்துக்கு என்ன வேணும்?” என்றால் தம் மனைவி மக்களையும் கூட்டிக் கொண்டு, “எனக்குக் கலம் நெல் வேணும்”என்பது போன்று- தம்மால் காதலிக்கப்பட்டவர்கள் இருக்கும் இடத்திற்குச் செல்லும் ஆடவர்கள் தம்மை அலங்கரித்துக்கொண்டு போமாறு போன்று- வேற்றரசர்களால் கலகங்கள் உண்டான காலங்களில் அடைய வளைந்தானுக்குள்ளே குடிவாங்கி இருந்து, இவ்விடம் இன்னார் பற்று, இவ்விடம் இன்னார்பற்று’ என்று பின்னும் தம் இடத்தைச் சொல்லிவைக்குமாறு போன்று- பயிர்த்தொழில் வேரிலே வெப்பந் தட்டினால் கொழுந்து முற்படி வாடுவது போன்று- நெற்பயிர் செய்யப் புல் தேயுமாறு போல்- நோயும் மருந்தும் பசியில்லாத காலத்தில் உணவு நோயினைத் தருவதாம் எனப்படுதலால், நோயின் மூலத்தை அறியும் மருத்துவர்கள் உணவு உண்ணலாகாது என்று விலக்குமாறு போன்று- பால்குடிக்க நோய் தீருமாறு போன்று- தண்ணீர்ப் பந்தல் விடாயன் தண்ணீர்ப் பந்தலில் வந்ததும் சால் உருண்டு கிடந்தது போன்று- தார்மிகன் வைத்த தண்ணீர்ப் பந்தலை அழிப்பாரைப் போன்று- இராமாயணக் கதை மோஹித்துக் கீழே விழுந்த ஸ்ரீபரதாழ்வானைப் போன்று- சக்கரவர்த்தித் திருமகன் திரு அவதரித்த பின்பு வானர சாதி வீறு பெற்றாற் போன்று- விபீஷணனைச் சேர்த்துக் கொண்டாற் போல- 12000 படி இதனை இயற்றியவர் அழகிய மணவாள சீயர். இவர் கல்வி கற்று, உரை எழுதிய வரலாறு சுவையானது. 32 வயது வரை, |