வேதாந்த தேசிகர் (1269-1369) காஞ்சிபுரத்தின் ஒரு பகுதியான துப்புல்1 இவர் பிறந்த இடம். இவர் காலத்தில் வடகலை தென்கலை என, வைணவம் இரண்டாகப் பிரிந்தது. மாலிக்காபூர் படையெடுப்பால் திருவரங்கம் பாழ்பட்ட போது அங்கே இருந்து, கோயிலைக் காத்தார் இவர். ஆழ்வார் பாடல்களும் ஆசாரியார்கள் விளக்கமும் திருவாய்மொழிக்கு வியாக்கியானங்கள் பல தோன்றியது போல, திருவிருத்தத்திற்கும் ஐந்து உரைகள் தோன்றியுள்ளன. நம்பிள்ளை பெரியவாச்சான் பிள்ளை அழகிய மணவாள சீயர் அப்பிள்ளை பெரிய பரகால சுவாமி ஆகிய ஐவரும் விளக்கவுரை கண்டுள்ளனர். இவற்றுள், இப்போது பெரியவச்சான் பிள்ளை விளக்கம் ஒன்றே கிடைக்கின்றது. அப்பிள்ளையுரை, முதல் பதினைந்து பாடல்களுக்கு மட்டுமே கிடைக்கின்றது. ஏனையனை மறைந்து விட்டன.2 நம்பிள்ளை திருவாய்மொழிக்கு ஒன்பதாயிரப்படி (நஞ்சீயர் கூறிய விளக்கவுரை) எழுதி அருளியதோடு நம்மாழ்வாரின் பெரிய திருமொழி, திருவிருத்தம் தொண்டரடிப் பொடியாழ்வாரின் திருப்பள்ளி எழுச்சி ஆகியவற்றிற்கு விளக்கம் எழுதியுள்ளார். நஞ்சீயர் மதுரகவியாழ்வாரின் கண்ணிநுண் சிறுதாம்புக்கு உரை இயற்றியுள்ளார். ஆண்டாளின் திருப்பாவைக்கு ஈராயிரப்படி, திருப்பல்லாண்டு வியாக்கியானம் ஆகியவற்றை அருளி இருக்கின்றார். அழகிய மணவாள சீயர் திருவிருத்த வியாக்கியானம் இயற்றியுள்ளார். மேலும், அவர் தீபப் பிரகாசிகை, கீதா சாரம் முதலிய பல நூல்களை இயற்றியுள்ளார். பெரியவாச்சான் பிள்ளை, நாலாயிர திவ்வியப் பிரபந்தம் முழுமைக்கும் வியாக்கியானம் எழுதி வியாக்கியான சக்ரவர்த்தி என்னும் புகழைப் பெற்றார். இவரைக் குருபரம்பரா பிரபாவம், “அநந்தரம் பெரியாழ்வார் திருமொழி முதலான ஆழ்வார்கள் அருளிச் செயல்களுக்கு எல்லாம் வியாக்கியானம் செய்தருளி லோகத்தை வாழ்வித்தருளினார்” என்று புகழ்ந்து கூறுகின்றது. இவர்களேயன்றி இவர்கள் காலத்திற்குப் பின்னும் பல சான்றோர்கள் தோன்றி, ஆழ்வார்கள் பாடலுக்கு உரை எழுதிய 1. தூ-புல்; துப்புல் ஆயிற்று. தூ-தூய; துப்புல் - தருப்பைப்புல் 2. கரந்தைக் கட்டுரைகள்; பக்-274. பூவராகம் பிள்ளை. |