தோடு வைணவ தத்துவப் பொருளை விளக்கிக் கூறும் நூல்களை இயற்றினர். அவர்களில் பிள்ளை லோகாச்சாரியார், மணவாள மாமுனிகள், வேதாந்த தேசிகர், அழகிய மணவாளப் பெருமாள் நாயனார், திருவாய்மொழிப் பிள்ளை ஆகியோர் குறிப்பிடத் தகுந்தவர்கள். பிள்ளை லோகாச்சாரியாரின் விளக்கம் செறிவும் விரிவும் உடையது. இவரது விளக்கங்களில் இனிய உவமைகள் இடம் பெற்றுள்ளன. கீழே சிலவற்றைக் காண்போம்; “திருமந்திரத்தால் பிறக்கும் ஞானம், பைத்ருக தனம் போலே- பர்த்தாவினுடைய படுக்கையும் பிரஜையினுடைய தொட்டிலையும் விடாதே இருக்கும் மாதாவைப் போலே- ஸ்ரீ நந்தகோபரையும் கிருஷ்ணனையும் விடாத யசோதைப் பிராட்டியைப் போலே-” இவர், புராண இதிகாசங்கள் வேதத்தின் விளக்கம் என்னும் கருத்தினார். “வேதாந்தம் அறுதியிடுவது ஸம்ருதீதிஹாஸ புராணங்களாலே” என்றும், “இதிஹாஸ சிரேஷ்டமான ஸ்ரீ ராமாயணத்தால் சிறையிருந்தவள் ஏற்றம் சொல்லுகிறது; மகா பாரதத்தால் தூது போனவன் ஏற்றம் சொல்லுகிறது” என்றும் இவர் கூறியுள்ளார். அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் என்பவர் ஆசார்ய ஹ்ருதயம் எழுதியிருக்கின்றார். நாலாயிரதிவ்வியப் பிரபந்தப் பாடல்களின் கருத்தும் தொடரும் அடியும் மிகுதியாக அந்நூலில் உண்டு. வேதாந்த தேசிகர் மணிப்பிரவாள நடையில் எழுதினாலும் தனித் தமிழில் கவிதைகள் பல இயற்றியுள்ளார். இவர் மூன்று பக்கம் ஒரே வாக்கியம் வரும்படி எழுதுவார். சிறு சிறு தொடரே ஒரு வாக்கியமாய் அமைவதும் உண்டு. தனித் தமிழ் நடை பல இடங்கள் ஒளி வீசுகின்றது. உரைக்கு உரை திருவாய்மொழியின் 36000 படி வியாக்கியானத்திற்குச் சீயர் அரும்பதம், அடைய வளைந்தான் அரும்பதம் என்ற குறிப்புரைகள் இரண்டு உள்ளன. ஆத்தான் சீயர், திருவாய்மொழி வியாக்கியான அரும்பத விளக்கம், திருப்பல்லாண்டு வியாக்கியான அரும்பத விளக்கம் இரண்டும் எழுதியுள்ளார். |