பக்கம் எண் :

513ஆய்வு

     ஆழ்வார் (பெரியாழ்வார்) இல்லாத அவசரங்களிலே - கட்டி
வைத்திருக்கும் மாலைகளை எடுத்துச் சூடிக்கொண்டு, “இந்த
வடபெருங்கோயில் உடையானுக்கு நேர் ஒவ்வாது இருக்கிறேனோ!
ஒத்திருக்குறேனோ! என்னும் சொல் விளைத்து, காரை பூண்டு கூறை
உடுத்துச் சூடகம் அணிந்து தோள்வளை தரித்து, கைவளை குலுக்கி,
சிலம்பும் பாடகமும் அணிந்து, அஞ்சனம் தீட்டி, செவ்வாய் திருத்தி,
அசைந்து அசைந்து அவ் ஒப்பனை அழகை அங்குள்ள கண்ணாடியிலே
கண்டு ஹ்ருதயம் குளிர்ந்து, அந்தரங்களைத்து அவை தம்மை முன்
இருந்தபடியே வைத்துவிட்டு வேறு கைங்கர்யத்தில் ஈடுபட்டிருப்பார்.”

     இப்பகுதியைப் படிக்கும்போது ஆண்டாள் ஒப்பனை செய்து கொண்டு
கண்ணாடிமுன்  நின்று அழகு பார்த்து மகிழும் திருக்கோலம் நம் கண்முன்
தோன்றி, கலைவல்லான் ஒருவனால் தீட்டப் பெற்ற எழில் ஓவியமாய்
மின்னிப் பொலிகிறது. உரை நடைக்கு உள்ள ஆற்றல் இப்பகுதியால் நன்கு
வெளிப்படுகின்றது.

வைணவ ஆசாரியர் பரம்பரை

நாத முனிகள் (824-918)
|
ஈசுர பட்டர் (மைந்தர்)
|
ஆளவந்தார் (மைந்தர்)
|
பெரிய திருமலை நம்பி (மாணவர்)
|
காந்திமதி + கேசவ சோமாஐி
|
இராமானுசர் (1107-1227)
|
74 சிம்மாசனாதிபதிகள்

|----------------------------|-------------------------------|

          பிள்ளான்           கூரத்தாழ்வார்          அமுதனார்
           (6000 படி)             |

பராசர பட்டர் (மைந்தர்)
|
நஞ்சீயர் (மாணவர்; 9000 படி)
|
நம்பிள்ளை (மாணவர்)
|