மாணவர்கள் |---------------------------|-------------------------------| வடக்குத் திருவீதிப் பிள்ளை நடுவில் திருவீதிப் பெரியவாச்சான் பிள்ளை (36000 படி) பிள்ளை பட்டர் (24000 படி) | | பிள்ளை லோகாசாரியர் அழகிய மணவாள சீயர் (1264-1327) (மைந்தர்) (மாணவர்) (12000 படி) | வேதாந்த தேசிகர் (1269-1369) | மணவாள மாமுனி | அஷ்டதிக் கஜங்கள் | வானமாமலை சீயர் முதலியோர். 2. திருமுறை உரைகள் சைவசமயச் சான்றோர்கள் அருட்பாடல்களைப் பொழிந்து பத்திப்பயிர் வளர்த்தனர்; தமிழை ஆண்டவனுக்கு உகந்த மொழியாக்கினர்: தமிழுக்கு அளவற்ற தெய்வத் தன்மையை ஏற்றினர்; தமிழ் மொழியையும் சிவ பெருமானையும் தொடர்புபடுத்தி, அதனை ஆற்றல் மிக்க மொழி என்று காட்டினர். தமிழின் பெருமையைப் பரஞ்சோதியார், தொண்டர் நாதனைத் தூதிடை விடுத்ததும், முதலை உண்ட பாலனை அழைத்ததும், எலும்புபெண் உருவாக் கண்ட தும்மறைக் கதவினைக் திறந்ததும் கன்னித் தண்டமிழ்ச் சொலோ? மறுபுலச் சொற்களோ? சாற்றீர்! 1 என்று போற்றிப் புகழ்கின்றார். சைவ அடியார்களை நாயன்மார்கள் என்று அழைப்பது வழக்கம். நாயன்மார்களுள் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்திசுவாமிகள், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரும் ‘நால்வர்’ என்று சிறப்பாக வழங்கப்படுகின்றனர். இவர்களுள் முதல் மூவரும் இயற்றிய பாடல்கள் தேவாரம் என்றும், மாணிக்கவாசகர் இயற்றிய பாடல்கள் திருவாசகம் என்றும் வழங்கப்பெறும். 1. பரஞ்சோதியார் - திருவிளையாடற்புராணம், நாட்டுச் சிறப்பு - 68. |