பக்கம் எண் :

521ஆய்வு

கின்றார். இவர் சைவ சித்தாந்தங்களைக் கற்றுத்தெளிந்து, பக்தியுடன்
பொருள் எழுதுகின்றார். நாயன்மார்களின் அருட் பாடல்களிலிருந்தும்,
சாத்திரம், புராணம், ஆகியவற்றிலிருந்தும் பல மேற்கோள்களைத் தந்து
விளக்குகின்றார்.

     இவர் உரையில், வைணவ வியாக்கியானங்களின் சாயல் உள்ளது.

     இவ்வுரை இரு பகுதிகளாகத் தமிழக அரசால் (1954)
வெளியிடப்பட்டுள்ளது.

உரையின் சிறப்பியல்கள்

    இவ்வுரை எளிதில் விளங்கும் வகையில் தெளிவாக அமைந்துள்ளது.

    அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்
    அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி
    ஒன்றனுக்கு ஒன்று நின்றெழில் பகரின்
    நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன
    இன்னுழை கதிரின் துன்அணுப் புரையச்
    சிறியவாகப் பெரியோன்                           (1-6)

என்ற அடிகளுக்கு விளக்கம் பின்வருமாறு உள்ளது:

     “உண்டை போலும் இருக்கின்ற அண்டத்தினது முடியடிகளை
விசாரிக்கும்போது, அளத்தற்கு அரிய தன்மைகளும் வளத்திற சிறந்த
காட்சிகளும் மிகுந்திருக்கிற ஒவ்வோர் அண்டத்திற்குத் தொகையளவு
சொல்லுமிடத்து நூறு கோடி யோசனை அளவாக இருக்கும். அப்படி
அளவில்லாத அண்டங்களும் பல உண்டு. அவ்வண்டங்கள் எல்லாம் சிவனது
பெருமைக்கும் அண்டங்களின் பெருமைக்கும் அளவைப் பிரமாணம்
சொல்லுமிடத்து ஓர் அண்டத்தின், ஓர், உலகத்தின், ஒரு தேசத்தின், ஒரு
நாட்டின், ஒரு வீட்டில், ஓர் ஓட்டையின்கண் சூரிய கிரணம் ஓடு்ம்போது
அதற்குள்ளே கண்ணுக்குத் தெரிகிற பல அணுக்கள் கூட்டத்தில் ஓர் அணு
என்று சொல்லலாம்.”

     திருக்கோத்தும்பி என்னும் பகுதியில், தும்பி பறக்கும் விளையாட்டைப்
பற்றி, “(தேன்) எனக்கும் கிடைத்தது. உனக்கும் கிடைத்தது என்று ஒருவர்க்கு
ஒருவர் மடி பிடித்துக்காண வண்டு சுழல்கிறதுபோலச் சுற்றும் ஆனந்த
விளையாட்டு” என்று கூறுகின்றார்.

மற்ற உரைகள்

    சுந்தரமாணிக்க யோகீசுவரர்: இவர் திருவாசகத்திற்கு இயற்றிய உரை அட்டாங்கயோக முறைகளை விளக்கும் நிலையில்