உள்ளது இவர் உரை, அன்பு நூலாகிய திருவாசகத்தை யோகாநுபவமாக மாற்றி விட்டது என்பர். வாசுதேவ முதலியார், இராமசாமி முதலியார் (1397) முருகேச முதலியார் ஆகியோர் உரைகள் பாடல்களுக்குப் பொருள் கூறும் அளவிலேயே உள்ளன. சிவஅருணகிரி முதலியார்: இவர் எல்லாப் பாடல்களுக்கும் தேவையான அளவு குறிப்புரைகளும், திருவாசக விஷய சூசனம் அறுபது என்ற தலைப்பில் சில பகுதிகளுக்கு வேதாகம உபநிடதப் பிரமாணங்களுடன் தடை விடை விளக்கங்களும் தந்திருக்கிறார். இந்தவுரை, மரபிற்கு மிக ஏற்றதாய் அனுபவத்திற்கு வழிகாட்டியாய் உள்ளது. கா. சுப்பிரமணிய பிள்ளை: இவர் உரை பொழிப்புரையாக உள்ளது. மிகத் தெளிவாகச் சொற்பொருளை உணர்த்துகின்றது: யாரும் எளிதில் உணர உதவுகின்றது: சிறந்த வழிகாட்டியாய் உள்ளது. இவ்வுரையில் ஆசிரியரின் தமிழ்ப்பற்றும் சித்தாந்தச் செந்நெறியின் கீர்த்தியும் தொட்ட இடம் எல்லாம் பொலிந்து தோன்றுகின்றன. மறைமலையடிகள்: வடமொழி, தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ஆழ்ந்த புலமைமிக்க இவர், திருவாசகத்தில் முதல் நான்கு பாடல்களுக்குமட்டும் விரிவுரை மிகச் சீரிய முறையில் எழுதியுள்ளார். ‘போற்றி’ என்று சொல்லுக்கு இவர் செய்யும் இலக்கண ஆராய்ச்சி கற்று மகிழத்தக்கது. வடமொழியிலும் தமிழிலும் உள்ள சைவ நூற் பிரமாணங்களோடு திருவாசகத்தின் உண்மைப்பொருளை உணர்வதற்கு உறுதுணை செய்கின்றது இவரது உரை. பண்டிதமணி: வடமொழியும் தமிழும் வல்ல இவர், திருச்சதகம், நீத்தல் விண்ணப்பம், திருவெம்பாவை ஆகிய மூன்றிற்கு மட்டும் உரை இயற்றியுள்ளார். இவர் உரை உள்ளுணர்விலிருந்து பிறந்து, அனுபவத்தை வெளிப்படுத்துகின்றது. உரையில் சொல்நயம், சைவ சித்தாந்தக் கருத்து, வரலாற்று நுணுக்கம் ஆகியவை மிளிர்கின்றன. இலக்கியச்சுவை தோன்ற நயம்பட எழுதிச் செல்வது இவரது இயல்பு. நீத்தல் விண்ணப்பத்தில் வரும், இருதலைக் கொள்ளியின் உள் எறும்பு ஒத்து (9) என்ற உவமையினைப் பின்வருமாறு நயமாக விளக்குகின்றார். “கொள்ளி நடுவண், கொள்ளிமேல் என்னாது கொள்ளியுள் என்றது ஒரு நயம், கொள்ளி நடுவிடத்துள்ள எறும்பு, அங்கும் |