உயிர் உணரும் முறையையும், ஒன்பதாம் சூத்திரம் உயிர் பாச ஞானத்திற்கு மீளாதவாறு அதனைப் புனிதமாக்கும் முறையையும் கூறுகின்றன. பத்தாம் சூத்திரம் பாசநீக்கம் பண்ணும் முறையை உணர்த்துகின்றது. பதினொன்றாம் சூத்திரம் உயிரானது அயரா அன்பால் இறைவன் திருவடியாகிய சிவானந்த அனுபவம் எய்துவதை உணர்த்துகின்றது. பன்னிரண்டாம் சூத்திரம் சீவன் முக்தர் நிலையைக் கூறுகின்றது. உரைகள்: சிவஞானபோதத்திற்குச் சிவஞான முனிவர் சிற்றுரையும் பேருரையும் இயற்றியுள்ளார். பேருரை, பாடியம் என்று போற்றப்படுகின்றது. இந் நூலுக்குப் பதினேழாம் நூற்றாண்டில், திருநெல்வேலியில் வாழ்ந்த பாண்டிப் பெருமாள் உரை இயற்றியுள்ளார். சிவஞான போதச் சூத்திரக் கருத்து என்னும் நூல், பன்னிரண்டு சூத்திரக் கருத்துக்களையும் திரட்டிக் கூறுகின்றது. சிவஞான போத உதாரண வெண்பா என்றும் நூல், சிவஞான போதத்தின் சூத்திரப் பொருள்களுக்கு உதாரணமாக எழுந்தது. இருபதாம் நூற்றாண்டில் காரைக்குடி சொக்கலிங்கையா, சிவஞானபோத லகுவசனம் இயற்றியுள்ளார். மெய்கண்டதேவர் சிவஞான போதத்திற்கு மெய்கண்டதேவர் எழுதிய வார்த்திகப் பொழிப்பில், அவர் காலத்தில் வழங்கிய பல பேச்சு மொழிச் சொற்கள் இடம் பெற்றுள்ளன. எளிய மக்களும் சைவ சமயக் கருத்துக்களைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று அவர் அவ்வாறு எழுதியிருக்கலாம். “அத்துவிதம் என்ற சொல்லானே ஏகம் என்னில் ஏகம் என்று சுட்டுவது உண்மையின் அத்துவிதம் என்ற சொல்லே அந்நிய நாத்தியை உணர்த்தும் ஆயிட்டு” என்பது போன்ற இடங்களில் பேச்சு மொழியின் இயல்பைக் காணலாம். ஆயிட்டு என்ற சொல் ஆயிற்று என்பதன் திதிபாகும். இச் சொல் அக் காலத்துப் பேச்சு வழக்கில் இருந்திருக்கலாம். சிவஞான சித்தியார் சிவஞான சித்தியார், சிவஞான போதத்தின் வழிநூல். இதனை இயற்றிய அருள் நந்தி சிவாச்சாரியார் பதின்மூன்றாம் நூற்றாண்டினர். சிவஞான சித்தியார், பரபக்கம் சுபக்கம் என இரு பிரிவுகளை உடையது. ‘பார்விரித்த நூல் எல்லாம் பார்த்தறியச் |