செய்து உரையால்” என்று இவர் கூறுவது, பேராசியர் மரபியலில் ‘மொழிபெயர்த்தல்’ என்ற தொடருக்குக் கூறும் விளக்கத்தை நினைவூட்டுகின்றது. ஒப்பிட்டு ஆராய்தல் தொல்காப்பியத்தையும் நன்னூலையும் ஒப்பிட்டுக் கற்று, ஒற்றுமை வேற்றுமைகளை ஆராய்ந்து அறிந்தவர் சிவஞான முனிவர். ‘தொல்காப்பியச் சூத்திர விருத்தியில் இரு இலக்கண நூல்களையும் ஒப்பிட்டு, நன்னூல் தொல்காப்பியத்திலிருந்து வேறுபடும் இடங்கள் பன்னிரண்டை அடுக்கிக் காட்டுகின்றார். அவை இலக்கணம் பயில்வோருக்குப் பெருந்துணை புரியவல்லவை. ஆதலின் அவற்றைக் கீழே தருவோம். 1. “செய்யுள் இயலுள் கூறிய ஒற்றளபெடையை, அளபெடை அதிகாரப்பட்டமை நோக்கி உயிரளபெடையைச் சார வைத்துக் கூறுதலும்; 2. தனிநிலை முதல்நிலை இடைநிலை ஈறு எனும் நால்வகை இடத்தை மூன்று இடம் என அடக்குதலும்; 3. ‘மெல்லெழுத்து மிகுதல் ஆவயினான’ (தொல்.புள்ளி-20) என்றவாறே தங்கை நங்கை எங்கை செவி தலைபுறம் என மகாரம் கெட்டு இன மெல்லெழுத்து மிகும் என்னாது, மகரமே இன மெல்லெழுத்தாய்த் திரியும்’ (நன்-மெய். புணர்-16) என்றலும்; 4. அகமென் கிளவிக்குக் கைமுன் வரினே முதனிலை ஒழிய முன்னவை கெட்டு மெல்லெழுத்து மிகும் (தொல்-புள்ளி-20) என்னாது, அங்கை என்புழிக் ககர அகரம் கெட்டு மகரம் திரிந்து முடியும் (நன்-மெய்-புணர்-19,16) என்றலும்; 5. முதல்ஈ ரெண்ணின் ஒற்று ரகரமாகும் (தொல். குற்-34) இடைநிலை ரகரம் இரண்டென் எண்ணிற்கு நடை மருங்கின்று (தொல். குற்-34) என்றவாறே கூறாது. இரண்டன் ஒற்று உயிர் ஏக நின்ற ரகர ஒற்றின் மேல் உகரம் வந்து செய்கைப்பட்டு முடியும் என்றலும்; 6. நாகியாது என யகரம் வரும் வழி உகரம் கெட்டு இகரம் தோன்றும் என்னாது (தொல். குற்-5) உகரமே இகரமாய்த் திரியும் என்றலும் (நன்-உயிர்-14); |