பக்கம் எண் :

535ஆய்வு

     7. நெடுமுதல் குறுகும் மொழிகளின் முன் பொதுப்பட ஆறன்
உருபிற்கும் நான்கன் உருபிற்கும் அகர நிலையும் எனக்கூறி

    ஆறன் உருபின் அகரக் கிளவி
    ஈறாகு அகரமுனைக் கெடுதல் வேண்டும்
                                   (தொல்-புணர்-13)

என்னாது ‘குவ்வி னவ் வரும்’ என்றொழிதலும்;

     8. ஆடிக்குக் கொண்டான் என்புழி (தொல். உயிர்-46) இக்குச்சாரியை
என்னாது குச் சாரியை என்றலும்;

     9. வற்றுச் சாரியை வகரம் கெட்டு அற்று என நிற்கும் என்னாது
அற்றுச் சாரியை என்றே கோடலும் (நன்-உருபு-5);

     10. இன் என் சாரியை இன்று எனத் திரியும் என்னாது இற்று என்பது
வேறு சாரியை எனக் கோடலும்:

     11. அக்கு என் சாரியை மெய்மிசையொடு கெடும் என்னாது, அகரச்
சாரியை எனக் கோடலும்;

     12. அ ஆ வ - என மூன்றும் பலவறி சொல் என்னாது (தொல்-வினை.
19), உண்குவ உறங்குவ என்புழி வகரத்தை வேறு பிரித்து இடை நிலை எனக்
கொண்டு அகர விகுதி (நன் - வினை-10) என்றொழிதலும்.”

என்பனவற்றை இரு நூல்களுக்கும் உரிய வேறுபாடுகளாகக் காட்டுகின்றார்.

ஆகுபெயரும் அன்மொழித் தொகையும்

    ஆகுபெயர்க்கும் அன்மொழித் தொகைக்கும் உள்ள வேறுபாடுகளை மிக
விரிவாக ஆராய்ந்தவர் சிவஞான முனிவர். தம் காலத்திற்கு முன்வாழ்ந்த
இலக்கண அறிஞர்கள் கூறிய பல்வேறு கருத்துக்களை எல்லாம் ஒருங்கு
திரட்டி ஆராய்ந்து தம் கருத்துகக்ளையும் வெளிப்படுத்தியுள்ளார்.
தொல்காப்பிய முதற்சூத்திர விருத்தியுள், “ஆகுபெயர், ஒன்றன் பெயரான்
அதனோடு இயைபு பற்றிய பிறிது ஒன்றினை உணர்த்தி ஒரு
மொழிக்கண்ணதாம். அன்மொழித் தொகை இயைபு வேண்டாது இருமொழியும்
தொக்கத் தொகை ஆற்றலால் பிறிது பொருள் உணர்த்தி இரு மொழிக்
கண்ணதாம். இவை தம்முள் வேற்றுமை என்க” என்று தெளிவுப்படுத்தியப்
பின்னர் விரிவாக அவற்றை ஆராய்கின்றார்.

     இவர் தொடங்கிவைத்த ஆராய்ச்சியைப் பின்பற்றி, இருபதாம்
நூற்றாண்டின் தொடக்கத்தி்ல் கருத்துப் போராட்டம்