வினைக் குறிப்புமே கொள்ளும் என்பார் பெயரை ஒழித்து வினைகொளும் என்றும்: 6. இச் சொல் ஒருமைப் பகுதியோடு பன்னை விகுதி மயங்கிப் பால் வழுவாய் நின்றதேனும் தன்னில்பாய் மயங்கி நின்றமையின் வழாநிலை போலும் என்பதூஉம், பன்மைவினை என்றது சொல் மாத்திரையில் பன்மைவினையன்றி, பொருள் மாத்திரையின் ஒருமை வினையாம் ஆதலின் இப் பயனிலையை ஒருவர் என்னும் சொற் கொள்ளுதல் வழுவன்று என்பதூஉம் தோன்றப் பாங்கிற்று என்றும்: 7. இங்ஙனம் ஆதல் சான்றோர்க்கு ஒப்ப முடிந்தது என்பார் என்ப என்றும் கூறினார்.” இப் பகுதி, சிவஞான முனிவரின் இலக்கண ஆராய்ச்சியை வெளிப்படுத்துகின்றது. வடமொழிப் பற்று சிவஞான முனிவர், சேனாவரைப் போன்று வடமொழிப் பற்று மிகுந்தவர். பல இடங்களில் வடமொழி இலக்கணத்தை விளக்குகின்றார்; போற்றியுரைக்கின்றார். பின்வரும் பகுதிகள் இவரது வடமொழிப் பற்றை நன்கு வெளிப்படுத்தும்: “வட நூல் உணர்ந்தார்க்கு அன்றி, தமிழ் இயல்பு விளங்காது என்பதும் உணர்ந்து கோடற்கு அன்றே, பாயிரத்துள் ‘ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்’ என்றதுவும் என்க” “வட நூற் கடலை நிலை கண்டு அறிந்த சேனாவரையர் எழுத்ததிகாரத்திற்கு உரை செய்தார். ஆயின், இன்னோரன்ன பொருள் அனைத்தும் தோன்ற, ஆசிரியர் கருத்து உணர்ந்து உரைப்பர். அவர், சொல்லதிகாரம் போலப் பெரும்பயன்படாமை கருதி, எழுத்திற்கு உரை செய்யாது ஒழிந்தமையின், தமிழ்நூல் ஒன்றே வல்ல உரையாசிரியரை உள்ளிட்டோர் உரையை ஆசிரியர் கருத்தாகக் கொண்டு பின்னுள்ளோரும் மயங்குவராயினார்”. -தொல். முதற்சூத்திர விருத்தியுரை. 2. சூத்திர விருத்தி தொல்காப்பிய பாயிரம், முதற் சூத்திரம் ஆகிய இரண்டிற்கும் சிவஞான முனிவர் மிக விரிவாக ஆராய்ச்சியுரைகள் இயற்றியுள்ளார். இந்நூல், முனிவரின் ஆராய்ச்சித் |