பக்கம் எண் :

உரையாசிரியர்கள்546

7. சிவஞானபோதச் சிற்றுரை

     சிவஞான முனிவர் இயற்றிய உரைகளுள் சிவஞான போதச்
சிற்றுரையும் ஒன்று. சிவஞான போதத்திற்குப் பேருரை காணு முன்னரே,
முனிவர் அந்நூலுக்குச் சிற்றுரை கண்டார் என்பர் தமிழறிஞர் கா.
சுப்பிரமணிய பிள்ளை, சிற்றுரையில் கூறியுள்ள கருத்துக்கள் யாவும்
பேருரையுள் அடங்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

     ஆனால், மறைமலை அடிகளார், சிவஞானபோத ஆராய்ச்சி என்னும்
தம் நூலில் சிவஞானபோதச் சிற்றுரை பேருரைக்குப்பின் இயற்றப்பட்டதாய்க்
கூறுகின்றார். அடிகளார் அந்நூலில், “தமது பேருரைக்கண் ‘அது’ என்பதற்கு
‘அலி’ எனப்பொருள் உரைத்த சிவஞான முனிவரே, அதற்குப் பிற்காலத்தே
தாம் வரைந்த சிற்றுரைக்கண் அவ்வாறு அதற்குப் பொருள் கூறக்
காணாமையின், அதற்கு அலி எனப் பொருள்கோடல் பொருந்தாமையினைப்
பின் உணர்ந்தார்” என்று கூறுகின்றார்.*

8. சிவஞான சித்தியார் சுபக்கவுரை

     சிவஞான சித்தியார், ‘தண்டமிழின் மேலாந்தரம்’ என்று பாராட்டப்
பெற்ற நூல்,

         சிவத்துக்கு மேல் தெய்வம் இல்லை
         சிவஞான சித்தியார்க்கு மேல் நூல்இல்லை

என்ற ஆன்றோர் செய்யுளும் இதன் சிறப்பை விளக்கும்.

     இந்த நூல், பரபக்கம் சுபக்கம் என்னும் இரு பகுதிகளையுடையது.

     சுபக்கம் என்னும் பகுதியின் தொடக்கத்தில் ‘அளவை இயல்’ உள்ளது.
அதில் தருக்க நூற் கொள்கைகள் நன்கு விளக்கப்பட்டுள்ளன. பதினாக்கு
செய்யுட்கள் அளவை இயலில் உள்ளன. முற் காலத்தில் தமிழில் தருக்க
நூல்கள் இருந்தன. ஏரணம் என்ற தமிழ்ச் சொல், தருக்க நூலைக்
குறிக்கின்றது. பண்டைய தருக்க நெறிக்குச் சான்றாய், சுபக்க அளவையியலில்
உள்ள பதினான்கு செய்யுட்கள் உள்ளன.

     தமிழரின் சமயச் சிந்தனைகளை முழுமையாகத் தருகின்ற தலைசிறந்த
நூலாகத் திகழ்கின்றது. இலக்கண நுட்பம் இலக்கிய


 * சிவஞான முனிவர் வரலாறும் நூலாராய்ச்சியும்; பக்கம்-143.