பக்கம் எண் :

553ஆய்வு

அங்ஙனம் செய்யாது விடுகின்றோம். எனினும், சைவ சித்தாந்திகள் முதலிய
எல்லா வகுப்பினருக்கும் தமிழறிவுள்ள அனைவரும் அதை ஆவலுடன்
ஆதரவு செய்வார்கள் என்று உறுதியாக நம்புகிறோம்.”*

     இந்த மதிப்புரையில், நூலின் சில பகுதிகள் கிடைக்காமல், போனது
பற்றி வருத்தமுறுவதாய்க் கூறியுள்ளார், பாரதியார். ஆனால், பிற்காலத்தில்
அக்குறை நீங்கியது. கிடைக்காத பகுதிகள் கிடைத்தன. நூல் முழு வடிவம்
பெற்றுப் பல பதிப்புகள் வெளிவந்துள்ளன.


* பாரதி தரிசனம்; (என்.சி.பி.எச், சென்னை) 1986. பக் - 447, 448