பக்கம் எண் :

உரையாசிரியர்கள்570

    ஐம்மையும் பழமையும் புதுமையும் இனிமையும்
         அணிமையும் நிலைமை யும்நேர்
    ஆண்மையும் மும்மையும் ஒருமையும் பன்மையும்
         அறுமையும் இருமையும் மிக்க
    கைம்மையும் கூர்மையும் கேண்மையும் சேண்மையும்
         கடிய வளமையும் இளமையும்
    காணரிய முதுமையும் பண்புப் பகாப்பதம்
         காட்டுமின் னனைய மாதே.*

    உரையறி நன்னூல் முழுதும் கிடைத்திருந்தால் பல அரிய விளக்கங்கள்
வெளிப்பட்டிருக்கும்!

5. கூழங்கைத்தம்பிரான் 

     கூழங்கைத்தம்பிரான், கூழங்கையார் என்று அழைக்கப்படுகின்றார்.
இவர், சைவ சித்தாந்தம் வல்ல புலவர்; வேளாளர் குடியில் காஞ்சிபுரத்தில்
பிறந்தவர்.

     இவரது இயற்பெயர் தெரியவில்லை. கை கூழையாய் இருந்தால், இவர்
இப்பெயர் பெற்றார். இவர், திருவாரூர் மடத்தில் சில காலம் தம்பிரானாக
இருந்தார். அப்போது இவர்மீது, மடாதிபதி சாட்டிய திருட்டுக் குற்றச்சாட்டை
மறுத்து, தாம் குற்றமற்றவர் என்பதை மெய்ப்பிக்க, பழுக்கக்காய்ச்சிய
இரும்புக் கம்பியைப் பிடித்தமையால் இவரது கை வெந்து கூழையாயிற்று
என்பர் (தமிழ்ப்புலவர் அகராதி - பக்கம்-138).

     பின்னர் இவர் யாழ்ப்பாணத்தில் குடியேறி வைத்தியலிங்கம்
செட்டியார் ஆதரவில் வாழ்ந்தார். பல மாணவர்களுக்குத் தமிழ் கற்பித்தார்;
சித்திவிநாயகர் இரட்டை மணிமாலை’ முதலிய சிறு நூல்களை இயற்றினார்.

     தம் வாழ்நாளின் இறுதிக் காலத்தில் கிறித்துவ சமயத்தைத் தழுவி
வாழ்ந்தபோது, யோசேப்புராணம் முதலிய கிறித்துவ சமயச் சார்பான
நூல்களை இயற்றினார். சிவியாதெருவில் வாழ்ந்து வந்த இவர் 1795-இல்
மறைந்தார்.

     இவர், நன்னூலுக்கு ஓர் உரை இயற்றினார். அந்நூல் மறைந்துபோய்
விட்டதாய்ப் பலரும் எண்ணிவிட்டனர். அது, தமிழ் நாட்டிலோ,
இலங்கையிலோ கிடைக்காமல் இருந்தது. அதனால், அது, மறைந்து போன
தமிழ் நூல்களின் பட்டியலில்.


 * தமிழ்ப் புலவர் வரிசை (13-ஆம் நூற்) பக்கம்-16. சு.அ. இராமசாமிப்
   புலவர்.