பக்கம் எண் :

571ஆய்வு

இடம் பெற்றது. ஆனால், தமிழரின் தவப்பயனாய் அலைகடல் தாண்டிச்
சென்று, ஜெர்மனி நாட்டில் இருக்கிறது.

     மேற்கு ஜெர்மனியில் உள்ள ஹைடல்பெர்க் பல்கலைக் கழகம்
1962 - இல் தொடங்கிய ‘தெற்கு ஆசியக் கழகம்’, கூழங்கைத்தம்பிரான்
நன்னூலுக்கு எழுதிய உரையைக் கண்டெடுத்தது. அங்கே தமிழ்த்துறையில்
பணியாற்றிவரும் தமிழறிஞர் அ. தாமோதரன் அவர்கள் அதனை மிகவும்
போற்றித் திருத்தமான கையெழுத்தில் படிஎடுத்துத் தந்துள்ளார். (1980).
அதன் பிரதி, அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில்-மொழியியல் துறையில்
உள்ளது. அதனை வெளிப்படுத்திய தாமோதரனாரே சிறந்த முறையில்
பதிப்பித்து வருகின்றார். அந்தப்பதிப்பு வெளிவருமானால் பல சிறந்த
ஆய்வுக் கருத்துகளும் உரை நலன்களும் வெளிப்படும்.

     கூழங்கைத் தம்பிரான் உரை, மயிலை நாதர் உரையைத் தழுவி
எழுதப்பட்டுள்ளது.

6. இராமநுசக் கவிராயர் 

     இராமாநுசக் கவிராயர் இராமநாதபுரத்தில் நாயுடு வகுப்பில் பிறந்தார்.
சிவஞான முனிவரின் மாணவராகிய சோமசுந்தரக் கவிராயரிடம் கல்வி
பயின்றார். சென்னையில் குடியேறித் தமிழ்ப் பணி புரிந்தார். சென்னையில்
வண்ணாரப்பேட்டையில் சஞ்சீவிராயன் கோயில் தெருவில் வாழ்ந்தார்.

     சென்னையில் இவரிடம் தமிழ்பயின்ற மாணவர்கள் பலர் அவர்களுள்
கந்தப்பையரின் மக்களான விசாகப் பெருமாள் ஐயர், சரவணப் பெருமாள்
ஐயர், தாண்டவராய முதலியார், அ. வீராசாமி செட்டியார் ஆகியோர்
குறிப்பிடத்தக்கவர்கள். வெளி நாட்டவரான ஜி.யு. போப், ட்ரு தாம்சன்
கிளார்க், ரானஸ், வின்ஸ்லோ ஆகியோரும் இவரிடம் பயின்றுள்ளனர்.

     ஜி. யு. போப் இராமாநுசக் கவிராயரைக் பற்றிப் பின்வருமாறு தாம்
இயற்றியுள்ள திருக்குறள் உரையின் ஆங்கில முன்னுரையில் எழுதுகின்றார்:

     “என் முதல் தமிழாசிரியர், யான் அறிந்த புலமைத் திறனும் மதி
நுட்பமும் உடைய எவரினும் சிறந்தவர்; நெடு நாட்களுக்குப்