உட்கொண்டு அமைதலும், இடையாயினார் அவரைத் துறத்தலும், கடையாயினார் அவரைக் கெடுத்தலும் உலகத்து உண்மையின் அம்மூவகையும் செய்யாது எனினும் அமையும் (65). முகமதியின் வித்தகம்சேர் மெல்லென் நோக்கம் - முகமாகிய மதியின்கண் உண்டாகிய சதுரப்பாட்டைச் சேர்ந்த மெல்லென்ற நோக்கம் (106). தொழுது எழுவார் - துயில் எழும் காலத்து அல்லது முன் உணர்வின்மையான் உணர்வுள்ள காலத்து மறவாது நினைவார் (118). இருவி என்பது கதிர் கொய்த தட்டை. தாள் என்பது கதிர் கொய்யாத முன்னும் சொல்வதோர் பெயர் (144). செறிகடல் - என்புழி, செறிவு - எல்லை கடவா நிலைமை (179)). அம்பல் - பரவாத களவு (180). திகழ்ந்து என்றதனால் ஒளிமிகுந்து விளங்கும் (182). மெய்த்தகை - புனையா அழகு (231) உய்த்து உணர்வோர் - வெளிப்படாத பொருளை ஏதுக்காளல் உணர்வோரை (236). இறுமாத்தல் - தாழாத உள்ளத்தராய்ச் செம்மாத்தல் (242). எழுங்குலை - இளங்குலை; செழுங்குலை - முதிர்ந்த சூலை (250). நிறைவு - அறிவோடு கூடிய ஒழுக்கம் (266). கடவுள் மழை - கடவுளால் தரப்பட்ட மழை (279). உவமைகளை விளக்குதல் பேராசிரியர், திருக்கோவையாரில் உள்ள உவமைகளில் பெரிதும் ஈடுபட்டு ஆராய்ந்து விளக்கம் கூறுகின்றார். அபூத உவமை (125), இல்பொருள் உவமை (244), இல் பொருள் உவமை எனினும் அபூத உவமை எனினும் ஒக்கும் (125) என்று உவமையின் வகைகளைச் சுட்டி விளக்குகின்றார். நூலில் இடம்பெற்றுள்ள உள்ளுறை உவமங்களை விளக்குகின்றார் (250, 260, 276, 254, 369, 377, 99, 128, 133, 168, 128). உவமை நயந்தோன்ற விளக்கும் இடங்கள் சிலவற்றைக் காண்போம்: தலைவன் தலைவியை அமிழ்து என்றும் அணங்கு என்றும் பாராட்டுகின்றான். அதற்குப் பேராசிரியர் “இன்பத்தைச் |