முரம்பு - கல் விரவி உயர்ந்திருக்கும் நிலம் (202). இவை என்பது தன்முன் உள்ளவற்றை; உவை என்பது முன் நின்றவற்றிற் சிறிது சேயவற்றை, அவை என்பது அவற்றினும் சேயவற்றை (223). சுத்தி - பிறர்க்குத் திருநீறு கொடுத்தற்கு இப்பி வடிவாகத் தலையோட்டான் அமைக்கப்படுவது ஒன்று. கடங்கம் என்பது மழு; இது கட்டங்கம் என நின்றது (242). நாடுதல் - மனத்தால் ஆராய்தல். பார்த்தல் - கண்ணான் நோக்குதல் (253). 3. தக்கயாகப் பரணி - பழையவுரை ஒட்டக்கூத்தர் இயற்றிய தக்காயகப் பரணிக்குப் பழைய உரை ஒன்று உள்ளது, இவ்வுரையின் தன்மைகளை இவ் உரையாசிரியரின் பல்வேறு சிறப்பியல்புகளை மிக விரிவாக ஆராய்ந்து நூலின் முன்னுரையில் டாக்டர் உ.வே. சாமிநாத ஐயர் தருகின்றார். மேலும், அப் பெரியவர், ‘சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும்’ என்ற நூலில் இவ்வுரையாசிரியரைப் பற்றி, ‘இவர் பெயர் தெரியவில்லை, எல்லா இயல்புகளிலும் அடியார்க்கு நல்லாரைப் போன்றவர். இவருடைய உரையினால் இவர் இருமொழியிலும் சிறந்த புலமை வாய்ந்தவர் என்று தெரிகின்றது” என்று கூறுகின்றார் (பக்கம் 162). இவ்வுரையாசிரியர் ஒட்டக்கூத்தரைக் ‘கவிச்சக்கரவர்த்தி’ என்று பெருமையுடன் அழைக்கின்றார் (தக்க - 536) சைவ சமயத்திலும் சோழர் குடிமீதும் பேரன்புடையவராக இவர் விளங்குகின்றார். தம் உரையில் வடசொற்களை மிகுதியாக ஆளுகின்றார். களேபரம் என்ற சொல்லைப் பிணம் (224) என்ற பொருளில் ஆளுகின்றார். இவர் உரை ஒருவகையாக அமையவில்லை. சில இடங்களில் பொழிப்புரை இடம்பெறும். சில இடங்களில் இலக்கணக் குறிப்பு மட்டும் இருக்கும். விரிவான நயம் காணப்படும் இடமும் உண்டு. ‘இதன் பொருள் அறிக’ என்று கூறிப் பொருள் எழுதாது சென்ற இடங்களும் உள்ளன. மேற்கோள்: வடமொழி நூல்களையும் மறைந்துபோன பல தமிழ் நூல்களையும் மேற்கோள் தருகின்றார். உதயணன் கதை (பெருங்கதை) யிலிருந்து கணக்கற்ற மேற்கோள்களை இவர் |