5. சொக்கப்ப நாவலர் தஞ்சைவாணன் கோவைக்கு விளக்கவுரை எழுதியவர் சொக்கப்ப நாவலர். இவர் தொண்டை மண்டலத்தைச் சேர்ந்த குன்றத்தூரில் பிறந்தார். 17-ஆம் நூற்றாண்டில், தமிழகத்தில் நாயக்க மன்னர்கள் சிறப்புற்றிருந்த காலத்தில் வாழ்ந்தவர். இவர் சிறந்த தமிழ்ப்புலமை உள்ளவர். பாவன்மையும் நாவன்மையும் நிரம்பியவர். தஞ்சைவாணன் கோவை இயற்றிய பொய்யாமொழிப் புலவர் மரபில் வந்தவர். இவர் சேலம் நகரில் கணக்கத் தெருவில் வாழ்ந்து வந்தார். இவர் வழியினர் இன்றும் சேலத்தில் வாழ்ந்து வருகின்றனர். தஞ்சைவாணன் கோவை உரை ஓர் அகப்பொருள் களஞ்சியம். எளிமையும் அழகும் தெளிவும் கொண்ட சிறந்த உரை இது. சில இடங்களில் இறையனார் களவியல் உரை எதிரொலிக்கின்றது. உரைநயம் மகட்போக்கிய செவிலித்தாய், இடைச்சுரத்தில் வரும் வேறு தலைவன் தலைவியைக் கண்டு ‘தன் மகளைக் கண்டீரோ’ என்று புலம்புகின்றாள். அதற்குத் தலைமகன், ‘யான் கண்ட அண்ணலும்... மயில் கண்ட மாதரும்... தஞ்சை காண்பர்களே” என்று விடை கூறுகின்றான். இதற்குச் சொக்கப்ப நாவலர் எழுதும் உரை மிகவும் நயமானது. “யான் கண்ட அண்ணலும் என் மயில் கண்ட மாதரும்” என்று கூறவே, எனக்கு அவள் தோன்றாமல் மறைந்து நின்றாள்; இவளும் அத்தன்மையாளதலின், இவள் அவளைக் கண்டதாகவும் தான் அவனைக் கண்டதாகவும் கூறினார். தலைவியை யான் கண்ட என்று கூறாது என் மயில் கண்ட மாதர் என்று கூறியது என்னை எனின் தலைவன் காணும் தன்மையள் அல்லது, அயலார் காணும் தன்மையள் அல்லள் ஆதலால் இவ்வாறு கூறினார்”.(தஞ் - 347) கோவை நாடகம் கோவை நூலை நாடகமாக எண்ணி உரை எழுதுகின்றார். “இத் தமிழ் நாடகத்தமிழ் எனப்படும். என்ன? கிளவி ஒழுங்கு படக்கோத்து, கதைபோல வந்து நாடகத்துக்கு ஏற்றலின், ஆயின், இலக்கணம் என்று இலக்கணத்தில் கூறியவாறு என்னை எனின், |