பக்கம் எண் :

587ஆய்வு

‘அந் நாடகத் தமிழ்க்கே இலக்கணம் கூறினார் என்க” என்று இவர் கூறுவது
நம் சிந்தனையைத் தூண்டுகிறது. (தஞ் - 1)

     கோவையை நாடகமாகக் கருதிய இவர், இயற்கைப் புணர்ச்சி
முதல்நாள் நிகழ்ச்சி, இடந்தலைப்பாடு இரண்டாம் நாள் நிகழ்ச்சி என்று
நாளையும் நிகழ்ச்சியையும் ஒன்றுபடுத்திக் காட்டிச் செல்கின்றார். வரை விடை
வைத்துப் பொருள் வயிற்பிரிதல் வரை ‘பதினாறாம் நாள் நிகழ்ச்சி’ என்று
குறிப்பிட்டு, ‘பொருள் வயிற் பிரிந்த தலைமகன் ஐம்பத்து ஒன்றாம் நாள்
மீண்டு வந்தமையால் முப்பத்துநான்கு நாள் இடைப்பட்டது என உணர்க’
என்று உரைக்கின்றார். நூலின் இறுதியில் ‘இதுகாறும் ஐம்பத்து ஆறாம் நாள்
செய்தி என்று உணர்க’ என்று முடிக்கின்றார்.

     கோவை கூறும் தலைமக்களைப் பற்றி இவர் கொண்டுள்ள கருத்தும்,
கோவை இலக்கியத்தை நாடகம் என்று கொண்டதற்குச் சான்றாய் உள்ளது.

     “தலைமகன் என்றும் தலைமகள் என்றும் கூறிய இவர் யார் எனின்,
இல்லது இனியது நல்லது என்று புலவரான் நாட்டிக் கூறப்பட்ட மூன்றனுள்,
இல்லதாகிய புனைந்துரையால் தோன்றினோர் என்க. இவரது இலக்கணம்
யாதோ எனின், பிணி மூப்பு இறப்புகள் இன்றி எஞ்ஞான்றும் ஒரு
தன்மையராய், உருரும் திருவும் பருவமும் குலனும் குணனும் அன்பும்
முதலியவற்றான் தம்முள் ஒப்புமையராய்ப் பொருவிறந்தார் என்ப”.

மடலேறல் - விளக்கம்

     தமிழ் அகப்பொருள் நூல்களில் கூறப்படு்ம் ‘மடலேறல்’ என்பது பற்றி
இவர் மிக விரிவாக விளக்குகின்றார். பழந் தமிழ் நூல்களில் மடலேறல் பற்றி
ஆங்காங்கே வரும் குறிப்புகளைத் திரட்டி ஓரிடத்தில் தந்து விளக்குகின்றார்.

     “மடலேறலாவது - தலைவன் ஒவ்வாக் காமத்தால் பனங்கருக்காற்
குதிரையும் பனந்தருவின் உள்ளவற்றால் வண்டில் முதலானவும் செய்து
அக் குதிரையின் மேல் ஏறுவது. மடலேறுவான் திகம்பரனாய், உடலெங்கும்
நீறுபூசிக் கிழி ஓவியர் கைப்படாது தானே தீட்டி, கிழியின் தலைப்புறத்தில்
அவள் பேரை வரைந்து கைப்பிடித்து, ஊர் நடுவே நாற்சந்தியில் ஆகாரம்
நித்திரையின்றி அக்கிழிமேற் பார்வையும் சிந்தையும் இருத்தி வேட்கை
வயத்தனாய் வேறு உணர்வின்றி, ஆவூரினும் அழல் மேம்படினும்
அறிதலின்றி, மழை வெயில் காற்றான் மயங்கா திருப்புழி, அவ்வூரிலுள்ளார்
பலரும் கூடி வந்து ‘நீ மடலேறுதியோ? அவளைத் தருதும்; சோதனை
தருதியோ?’ என்ற