பக்கம் எண் :

உரையாசிரியர்கள்588

வழி இயைந்தான் ஆயின், அரசனுக்கு அறிவித்து, அவன் ஏவலால் அவன்
இணைந்து நையத் தந்து மடலேறு என்றவழி, ஏறும் முறைமை; பூளை,
எலும்பு, எருக்கு இவைகளில் கட்டிய மாலை அணிந்துகொண்டு அம் மாவில்
ஏற, அவ்விடத்தை வீதியில் ஈர்த்தலும், அவ்வுருளை உருண்டு ஓடும்பொழுது
பனங்கருக்க அறுத்த இடம் எல்லாம் இரத்தம் தோன்றாது வீரியம் தோன்றின்
அப்போது அவளை அலங்கரித்துக் கொடுப்பது; இரத்தங் கண்டுழி அவனைக்
கொலைசெய்து விடுவது. இவை புலவரால் நாட்டிய வழக்கு என்று உணர்க”
(தஞ் - 101)

     மடலேறுதல் பற்றி இவர் கூறும் விளக்கம் இவையாகும். இவற்றில்
பொருந்தாதவை உள்ளன. பனங்கருக்கு அறுத்த இடமெல்லாம் இரத்தம்
தோன்றாது வீரியம் தோன்றும் என்பது சிறிதும் பொருந்தாது.
மடலேறுபவனைக் கொல்லுதல் என்பது வரலாறு கூறாத செய்தி. மடலேறல்
புலவரால் நாட்டிய வழக்கு என்பது தவறு. பல நூறு ஆண்டுகளுக்கு முன்
மக்கள் வாழ்வில் நிகழ்ந்த ஒன்றே இலக்கியத்தில் இடம் பெறுகிறது என்பது
அறிஞர்களின் முடிவு.

சொல்லும் பொருள் விளக்கமும்

    இவ்வுரையாசிரியர் தரும் சொற்பொருள் விளக்கம் மிக நயமானவை. சில
விளக்கங்களைக் கீழே காண்போம்:

     விருந்து என்பது உண்டிக்குப் பெயரோ எனின், விருந்து என்பது
புதுமை. உலகின்கண் மருவி ஊண் மேல் நின்றது. (தஞ் - 140)

     ஓம்படை - மறவாமை (தஞ் - 139)

     தேர்பண்ணல் - தெர் செலுத்தற்கு உரியன எல்லாம் அமையச்
செய்தல். (தஞ் - 262)

     இப்பி ஆயிரம் சூழ்ந்தது இடம்புரி;  இடம்புரி ஆயிரம் சூழ்ந்தது
வலம்புரி; வலம்புரி ஆயிரம் சூழ்ந்தது சலஞ்சலம். (தஞ் - 62)

6. மயிலேறும் பெருமாள் பிள்ளை

     கல்லாடம் என்னும் நூலுக்கு உரை இயற்றியவர் மயிலேறும் பெருமாள்
பிள்ளை.

     கல்லாடம் அகப்பொருள் இலக்கிய நூலாகும். இதில் நூற்றிரண்டு
அகவற் பாடல்கள் உள்ளன. இந்நூலில் மதுரையில் நடந்த பல
திருவிளையாடல்கள் கூறப்படுகின்றன. இதனை