இயற்றியவர் கல்லாடர். “கல்லாடம் கற்றவனோடு மல்லாடாதே” என்ற பழமொழி இந்நூலின் சிறப்பை உணர்த்தும். இந்நூல் கி.பி. எட்டாம் நூற்றாண்டுக்குப்பின் தோன்றியது என்பர். எட்டாம் நூற்றாண்டிற்குப் பின் தோன்றியதாகக் கருதப்படும் கல்லாடத்திற்குப் பதினேழாம் நூற்றாண்டில்தான் உரை தோன்றியது. மயிலேறும் பெருமாள் பிள்ளை கல்லாடத்தின் முதல் முப்பத்தேழு பாடல்களுக்கு உரை எழுதியுள்ளார். ஏனைய அறுபத்தைந்து பாடல்களுக்குப் புதுவை சுப்பராய முதலியார் பதவுரை பின்னர் எழுதினார். மயிலேறும் பெருமாள் பிள்ளை பாண்டி நாட்டினர். திருநெல்வேலி இவரது பிறப்பிடமும் இருப்பிடமுமாகும். இவர் சைவ வேளாளர் குடியில், தாண்டவ மூர்த்திப் பிள்ளையின் மகனாத் தோன்றினார். கல்வி கேள்விகளில் வல்லவராகிப் பெரும்புலவராய் விளங்கினார். சைவ சமயத்தை மேற்கொண்டு ஒழுகி, திருவாவடுதுறை மடத்துடன் தொடர்புகொண்டு வாழ்ந்தார். இலக்கணக் கொத்தின் ஆசிரியராகிய சாமிநாத தேசிகர் இவரிடம் கல்விகற்ற மாணவர். சாமிநாத தேசிகர் தம் ஆசானை, திருநெல் வேலி எனும்சிவ புரத்தன் தாண்டவ மூர்த்தி தந்தசெந் தமிழ்க்கடல் வாழ்மயி லேறும் பெருமாள் மகிபதி என்று போற்றுகின்றார். 7. கம்பராமாயண உரைகள் ஆங்கிலேயர்களின் முன்னால் இந்திய நாட்டுச் செல்வம் அனைத்தையும் ஒரு பக்கம் குவித்து வைத்து, மற்றொரு பக்கம் ஷேக்ஸ்பியர் நாடகச் செல்வத்தை வைத்து, “இவ்விரு செல்வங்களுள் எந்த ஒன்றினைப் பெற விரும்புகின்றீர்கள்?” என்று அவர்கள் வினவினால், ஷேக்ஸ்பியரின் நாடகச் செல்வத்தையே பெற விரும்புவதாய் அவர்கள் உரைப்பர் என்று கூறுவதுண்டு. இவ்வாறு கூறி, ஆங்கிலேயர்களின் இலக்கிய ஆர்வத்தையும், ஷேக்ஸ்பியரின் சிறப்பையும் புகழ்வர். இதே போன்ற கருத்தை, கம்பரைப் பற்றிய தனிப்பாடல் ஒன்று கூறுகின்றது. “இந்த உலகிலுள்ள எல்லாச் செல்வங்களையும் பெற்று அரசாளும் உரிமையுடன் வீற்றிருக்கும்போது ஏற்படுகின்ற |