பக்கம் எண் :

உரையாசிரியர்கள்592

     இந்த நூல் தோன்றுவதற்குப் பின் வரும் செய்யுள் காரணமாய்
இருந்தது:

    கற்றத்தார் தேவரொடும் தொழநின்ற
         கோசலையைத் தொழுது நோக்கி
    வெற்றித்தார்க் குரிசில்இவர் ஆர்என்று
         குகன்வினவ வேந்தர் வைகும்
    முற்றத்தான் முதல்தேவி மூன்றுலகும்
         ஈன்றானை முன்ஈன் றானைப்
    பெற்றத்தால் பெருஞ்செல்வம் யான்பிறந்த
         லால்துறந்த பெரியாள் என்றான்.

     இச் செய்யுள் பொருளாழம் உடையது என்று முதலியாரின் நண்பர்
சிலர் அடிக்கடி கூறிவந்தனர். அதனால், இச் செய்யுளின் பொருளை ஆழ்ந்து
நோக்கினார். அதன் பயனாய்ப் பின்வரும் விளக்கத்தை எழுதினார்.

     1. “சாமானியர் அல்லாத உயர்ந்த அரசரான சுற்றத்தாரே அன்றி,
தேவரும் தொழுது கொண்டிருக்கும் ஒருவரைத் தெரிய விரும்புவோர்.
அவரைக் கைந் நீட்டிச் சுட்டிக் காட்டி, ‘இவர் யார்?’ என்று கேட்டால்,
தகாத முறை என்று கூறாமல் கூறி, தக்க முறை இது என்று உணர்த்துவாராய்,

    கோசலையைத் தொழுது நோக்கி....
    .... இவர் ஆர்என்று
    குகன் வினவ

என்றார்.

     2. மேலும் ‘இவர் ஆர்?’ என்ற கேள்விக்குத் தசரதனுக்குத் தேவி,
இராமனுக்குத் தாய் என்ற விடைகள் இயல்பான விடைகளாயிருப்ப,
அவ்விடைகளை அவ்வாறு கூறாது, அவற்றைக் கூறும் முகத்தால் ‘வேந்தர்
வைகும் முற்றத்தான்’ எனத் தசரதனைச் சிறப்பித்தும்; ‘முதற்றேவி’ எனக்
கோசலையை மேம்படுத்தியும், ‘மூன்றுலகும் ஈன்றானை முன் ஈன்றான்’ என
இராமனை விதந்தும் கூறுவானேன் எனில், அக்கேள்வி கேட்ட சமயத்தில்,
கோசலா தேவியைச் சுற்றத்தாரும் தேவரும் தொழுதவண்ணமாய் இருந்தனர்.
ஆதாலல், அத் தேவியைக் கைந் நீட்டிக் காட்டலாற் சுட்டாது, கைகூப்பி
நோக்குதலாற் சுட்டின குகன், ‘சுற்றத்தார் தொழுவானேன்?’ தேவர்
தொழுவானேன்?’ என்று தெரிய விரும்பினான் என்பது ஊகித்துணர்தற்பாலது.
இவ்வாறாகக் குகன் கேளாது கேட்ட கேள்விகளுக்கு விடைகளாகப் பரதன்,
‘அரசர் வணங்கும் சக்கரவர்த்தியாகிய தரசதனத பட்ட மகிசி (பட்டத்து
அரசி) ஆதலால் சுற்றத்தார் தொழுகின்றார்கள்; மகா விட்டுணுவின்
அவதாரமான