பக்கம் எண் :

595ஆய்வு

     திருச்செங்கோட்டுப் புராண உரை - சேலம் சிற்றம்பல உபாத்தியாயர்
(20-நூற்).

     இரகுவம்சம் (தமிழ் மொழிபெயர்ப்பு 2404 பாடல்கள்)

     உரை: கணேசய்யர்.

9. வசனங்கள்

     எழுதப் படிக்கத் தெரிந்த பொதுமக்களுக்குப் பயன்படும் வகையில்,
செய்யுளில் இருந்த பல நூல்களை உரைநடையில் எழுதிப் பரப்பும் முயற்சி,
இரண்டு நூற்றாண்டுகளாக நடைபெற்று வருகின்றது. செய்யுளை அடியொற்றிப்
பொழிப்புரை திரட்டிப் புராண இதிகாசக் கதைகளை வசனம் என்ற பெயரில்
புலவர்கள் பலர் வெளியிட்டுள்ளனர். வசன நூல்கள் எழுதியவர்களைக்
காண்போம்:

ஆறுமுக முதலியார் (1822-1879)

    பெரிய புராண வசனம், திருவிளையாடற் புராண வசனம்.

பூவை. கலியாணசுந்தரம் (1854-1819)

    திருப்பாசூர்ப் புராண வசனம், திருவலிதாயப் புராண வசனம்,
திருவேற்காட்டுப் புராண வசனம், திருவொற்றியூர்ப் புராண வசனம்,
சீகாளத்திப் புராண வசனம்.

வ.சு. சண்முகம் பிள்ளை (1880-1941)

    திருவாடானைப் புராண வசனம், கோரணத்தல புராண வசனம்,
திருக்குடவாயிற் புராண வசனம், கண்டியூர்ப் புராண வசனம்.

மு. ரா. அருணாசலகவிராயர் (20 நூற்.)

    திருச்சொந்தூர்ப் புராண வசனம், திருப்பரங்குன்றப் புராண வசனம்,
திருக்குற்றாலப் புராண வசனம்.

காஞ்சிபுரம் இராமசாமி நாயுடு

    பிரபுலிங்க லீலை வசனம் (1902)

ச.க. இராகவ முதலியார்

    தேம்பாவணி வசனம்

பு. து. இராமசாமிப் பிள்ளை

    குடந்தைப் புராண வசனம் (1933).