இந் நாளில், காலத்துக்கேற்ற பணியாகக் கருதி வெளியிடுகின்றோம். விரிவான ஒரு பெரிய துறை பற்றிய இந் நூலை ஊதிய நோக்கு ஒன்றையே கருதி வெளியிட இயலாது; இலட்சிய நோக்கோடு வெளியிடுகின்றோம். இது உண்மை; வெறும் புகழ்ச்சியன்று. இந் நூலிற்கு அணிந்துரை, கருத்துரை நல்கிச் சிறப்பித்த அறிஞர்கள் அனைவருக்கும் எங்கள் நன்றி. எங்கள் நூல்களுக்குத் தமிழ் மக்கள் நல்கி வரும் ஆதரவு, இந் நூலுக்கும் தொடர்ந்து கிடைத்து எங்களை ஊக்குவிக்கும் என்று நம்புகின்றோம். |