பக்கம் எண் :

உரையாசிரியர்கள்606

    அம்போதரங்கம்: அம்போதரங்கம் என்பது நீர்த்திரையைச் சொல்லுமோ
எனில் சொல்லும். அம்புத்தரங்கம் என்னும் வடமொழியை அம்போதரங்கம்
என்று திரித்துச் சொன்னாராகலின் (80).

      சுரிதகம்: ஓரிடத்து ஓடாநின்ற நீர், குழியானும் திடரானும் சார்ந்து
இடத்து, சுரிந்து ஓடும் அதனைச் சுரிந்து என்றும், சுழி என்றும் வழங்குவது
(82).

புதிய விளக்கம்

    இராக்கதம் பைசாசம்  என்ற இருவகைத் திருமணத்திற்கும் இவர்தரும்
விளக்கம் புதியவை; மற்றவர் கூறாதவை.

     “இராக்கதம்: ஆடை மேலிடுதல் பூமேலிடுதல் கதவடைத்தல்
முதலியவற்றால் வலிதிற் கோடல்”

     “பைசாசம்: துஞ்சினாரோடும் மயங்கினாரோடும் சனித்தாரோடும்
செத்தாரோடும் விலங்கினோடும் இழிதகு மரபில் யாருமில்லா ஒருசிறைக்
கண் புணர்ந்து ஒழுகும் ஒழுக்கம்”.

கொள்கையும் கருத்தும்

    விருத்தியுரையின் ஒழிபியல் பகுதியுள், ஆனந்தக் குற்றங்களை விரிவாக
ஆராய்கின்றார். “பாட்டுடைத் தலைவனையே கிளைவிப்பட, கிளவித்
தலைவனாகக் கூறுவதூஉம் ஆனந்தம் எனக் கொள்க” என்று இவர்
கூறியள்ளார். மேலும், இவர் மலைபடு காடம் பாடலுள் நான்கு இடங்களைக்
காட்டி, பொருளானந்தம் ஆனந்தவுவமை என்று கூறுகின்றார்.

     பாக்களின் வகையையும் சாதியையும் தொடர்புபடுத்தி விளக்குகின்றார்.
இவர் காலத்திலேயே பாட்டியல் கூறும் பொருத்தங்களைப் பற்றிய கருத்துகள்
தோன்றிவிட்டன. அவற்றை இவர் சோதிட நுட்பத்துடன் விளக்குகின்றார்.

     எழுத்துகள் உரு உணர்வு ஒலி தன்மை என நல்வகைப்படும் என்று
விளக்குகின்றார்.

தொல்காப்பியத்தில் இல்லை

    யாப்பருங்கல விருத்தியுரை, தொல்காப்பிய நூற்பாவாக மேற்கோள்
காட்டுகின்ற ஒரு நூற்பா, இன்று தொல்காப்பியத்தில் இல்லை!

     விருத்தியுரை (பக்கம் - 132, கழகப் பதிப்பு), பாவிற்குரிய அடிகளின்
வரையறை பற்றி, தொல்காப்பியம் செய்யுளியலில் உள்ள நூற்பாக்கள்
ஐந்தினைக்காட்டி ஆறாவதாக,