பெருந்தேவனார், பல்லவர் காலத்தில் வாழ்ந்த பெருந்தேவனார் என்று பலர் உள்ளனர்.* நூலாசிரியரைப் பற்றிக் கூறும் பாயிரப் பாடல்களுக்குப் பெருந்தேவனார் உரை இல்லை. அப்பாடல்களுக்கு உரை இருந்திருப்பின், நூலாசிரியரைப் பற்றிய வரலாற தெளிவாகக் கிடைத்திருக்கும். உரையாசிரியராகிய பெருந்தேவனாரைப் பற்றி, தடமார் தருபொழில் பொன்பற்றி காவலன் தான்மொழிந்த படிவீர சோழியக் காரிகை நூற்றெண் பஃதொடொன்றின் திடமார் பொழிப்புரை யைப்பெருந் தேவன் செகம்பழிச்சக் கடனாக வேநவின் றான்தமிழ்க் காதலின் கற்பவர்க்கே என்ற பாடல் அறிவிக்கின்றது. மன்னன் புகழ் பெருந்தேவனார் தம் உரையில் வீரராசேந்திர சோழனைப் புகழ்ந்து பாடும் பல பாடல்களை மேற்கோளாகக் காட்டியுள்ளார். அப்பாடல்களை இவரே இயற்றி இருக்கவும் கூடும். “பழையாறை நகர்ச் சுந்தரச் சோழரை யாவர் ஒப்பர்?” என்ற கருத்துப்பட பாடல் ஒன்று மேற்கோளாக உள்ளது (வீர - 152). வீரராசேந்திரனைப் புகழ்ந்து பாடும் வெண்பாவும் கலிப்பாவும் யாப்பிலக்கண மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ளன. வீரராசேந்திரனின் நாட்டில் பாய்ந்து செழிப்பூட்டும் காவிரியாற்றினை, மரத்தினை ஓர்எழுத்துச் சொல்லும் மற்றொன்று நிரப்பிட நீரிற்பூ ஒன்றா - நிரப்பிய வேறொர் எழுத்துய்க்க வீரரா சேந்திரன்நாட்டு ஆறாம் எனஉரைக்க லாம் என்ற வெண்பா குறிப்பிடுகின்றது (வீர - 179). புத்தர் புகழ் பெருந்தேவனார் பௌத்த சமயத்தவர் ஆதுலின், உரையில் பல இடங்களில் புத்தரைப்பற்றிய மேற்கோளும் உதாரணமும் தருகின்றார். புத்தர் கண்ணனை உய்வித்தார் (வீர-41) புத்தனைத் தெய்வமாய் உடையன் பௌத்தன் (வீர-54) என்று பல இடங்களில் உதாரணம் காட்டுகின்றார். நேர், நிரை அசைகளுக்கு, இப் பெயர், இக்காலத்தில் மகாதேவன் என்று வழங்குகிறது. |