“தமிழ்ச் சொல்லிற்கு எல்லாம் வடநூலே தாயாகி நிகழ்கின்றமையின், அங்குள்ள வழக்கு எல்லாம் தமிழுக்கும் பெறும்” (வீர - 60). “வட மொழியில் அவ்வியச்சொல் தமிழின் இடைச்சொல் என அமைக்க” (வீர - 49). “வடநூலில் பெண்பாலைக் குறித்த நதீ, குமரீ என்னும் ஈகாராந்தச் சொற்கள் நதி, குமரி எனக் குறுகும்” (வீர - 56). “வனிதா தாரா உமா மாலா சாலா என வட நூலில் ஆகாராந்தமாய்ப் பெண்ணைக் குறித்துக் கிடந்த சொற்கள் தமிழில் ஐகாராந்தமாகி வனிதை தாரை உமை மாலை சாலை என முடியும். தேவதை கலை சீதை என வருவனவும் அது”. (வீர - 56). சொல்லாரய்ச்சி பெந்தேவனார் பல இடங்களில் சொற்களைப் பற்றிய ஆராய்ச்சியில் மிகவிரிவாக ஈடுபட்டுள்ளார். அவற்றை இங்கே காண்போம்: ‘பலவற்றை’ என்ற சொல்லை (பல + அற்று + ஐ) அற்றுச் சாரியை சேர்க்காமல் பலவை (பல +ஐ) என்றே வழங்குகின்றார் (வீர - 30). மூவிடப் பெயர்களைப்பற்றி இவர் பின்வருமாறு கூறுகின்றார். “உன் என்பதற்கு நும் என்பதும் நின் என்பதும் நான் என்பதற்கு யான் என்பதும் ஆதேசமாம். நாம், யாம் எனவும் யாவர் யார் எனவும் ஆதேசமாதலுமாம். பன்மையில் நீர்கள் நீங்கள் நாங்கள் தாங்கள் எனவும் யாவர்கள் அவர்கள் இவர்கள் உவர்கள் எவர்கள் எனவும் வரும். நீர்கள் என்பது நீயிர்கள் நீவிர்கள் என ஆதேசமாதலுண்டு. நீர் என்பது நீயிர் நீவிர் என ஆதேசமாம். நாங்கள் என்பது யாங்கள் என ஆதேசமாம்” (வீர - 37). இவர் கருத்துகளை, ‘திராவிட மொழியின் மூவிடப் பெயர்கள்’ என்ற நூலில் வேங்கடராஜீலு ரெட்டியார் மறுத்துள்ளார். பெருந்தேவனார் தம் காலத்து வழக்குச் சொற்களையும் ஆராய்ந்து பின்வருமாறு கூறுகின்றார்: “நாளி கோளி மூளை உளக்கு வாளை வளி எனவும், விழக்கு பழிக்கு தழிகை இழமை எனவும், பதினாறாம் உடலும் |