பக்கம் எண் :

உரையாசிரியர்கள்614

என்னும் மெய் உள்ளே ஒரு புள்ளி பெற்று, ‘ம்’ என்னும் மெய்யின்
வடிவத்தைப் பெறும் என்று பொருள் கூறியுள்ளனர்.

     ஆனால், பெருந்தேவனார் இந்த நூற்பாவுக்கு வேறு விளக்கம்
கூறுகின்றார். முன் வயிற்கால் வவ்வரின் (சந்தி - 19) என்ற நூற்பா
விளக்கத்தில்,

     “வருமொழி முதல் வகரம் வந்து புணர்ந்தால், அந்த மகரமானது குறுகி,
கால் மாத்திரையாய் - உட் புள்ளி பெறும்என்று கூறுகின்றார். இதுவே
பொருத்தம் உடைய விளக்கம்.

மொழியியலும் இலக்கணமும்

    இன்றைய மொழியில் சிந்தனையாளர்கள் போற்றி மேற்கொள்ளுகின்ற
பல இடங்கள் நூலிலும் உரையிலும் உள்ளன. அவை வழிவழியாக வருகின்ற
இலக்கணக் கொள்கைகளுக்கும், மரபுக்கும் மாறுபட்டவை. தொல்காப்பியமும்
நன்னூலும் பரப்பிய இலக்கணக் கொள்கைகளினால் தோன்றியுள்ள நூல்கள்
வீரசோழியத்தைத் தடுத்து நிறுத்தும் அரண்களாக உள்ளன.

4. தண்டியலங்கார உரை

    பல்லவர் காலத்தில் (600-900) வடமொழி இலக்கண, இலக்கியங்களுக்குத்
தமிழ்நாட்டில் பெரிதும் செல்வாக்கு ஏற்பட்டது. அதனால் பல வடமொழி
நூல்கள் தோன்றின. பிற்காலத்தில் வடமொழி நூல்களைத் தமிழில் மொழி
பெயர்த்தனர். பன்னிரண்டாம் நூற்றாண்டில தண்டியலங்காரம் என்னும்
அணி இலக்கண நூல், வடமொழியில் உள்ள காவ்யாதர்சம் என்ற
அலங்கார நூலின் மொழிபெயர்ப்பாகத் தோன்றியது. அந்த வடமொழி
நூலை இயற்றியவர் ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆசார்ய தண்டி.

     அம்பிகாபதி என்னும் தமிழ்ப் புலவரின் மகன் தண்டி என்பவர்
இயற்றியதே தண்டியலங்காரம். தண்டி வடமொழி அலங்கார நூலை
மொழிபெயர்த்து, உதாரணச் செய்யுள்கள் பலவற்றையும் வடமொழியிலிருந்து
தழுவி இயற்றினார் என்பர். பிரயோக விவேக நூலாசிரியர், “தண்டியாசிரியர்
மூலோதாரணமும் காட்டினாற்போல, யாமும் உரை எழுதியதல்லது
மூலோதாரணமும் காட்டினாம்.” (காரக - 3) என்று கூறுகின்றார். ஆனால்,
தண்டியலங்கார உதாரணப் பாடல்களில் சில பழைமையானவை; பழைய
நூல்களிலிருந்து மேற்கொண்டவை.