பக்கம் எண் :

உரையாசிரியர்கள்624

இலக்கணம் பயில்வோர் விரும்பிப்பயிலும் சிறந்த இலக்கண நூலாக இந்நூல்
விளங்குகின்றது.

நூலும் உரையும்

    அகப்பொருள் விளக்கம் எழுதிய நாற்கவிராச நம்பியே தம் நூலுக்கு
உரையும் இயற்றியுள்ளார். இதனை,

    அகப்பொருள் விளக்கம்என்று அதற்கு ஒருநாமம்
    புலப்படுத்து இருளறப் பொருள்விரித்து எழுதினன்

என்று சிறப்புப்பாயிரம் கூறுவதாலும்,

     “இருளறப் பொருள் விரித்து எழுதினன்” என்பதற்கு மயக்கம் தீர
உரையைப் பரப்பி எழுதினன் என்று அதன் உரை கூறுவதாலும் அறியலாம்.

     சிறப்புப்பாயிரமும் அதன் உரையும் நாற்கவிராச நம்பியின் வரலாறு
பற்றிக் கூறுவதைக் காண்போம்.

     நம்பி என்பது இயற்பெயர் என்று பாயிரவுரை கூறுகின்றது. நால்வகைக்
கவிதைகளாகிய ஆசுகவி, மதுரகவி, சித்திரகவி, வித்தாரகவி என்பனவற்றைப்
பாடும் திறன் பெற்றிருந்தால் ’நாற்கவிராசர்’ என்னும் சிறப்புப் பெற்றார்.
இவர் வடமொழி, தமிழ் இரண்டிலும் வல்லவர். சிறப்புப் பாயிரம்,

    இருபெருங் கலைக்கும் ஒருபெருங் குரிசில்
    பாற்கடற் பல்புகழ் பரப்பிய
    நாற்கவி ராச நம்பி

என்று இவர் புகழைக் கூறுகின்றது.

     புளியங்குடி என்னும் ஊரில் வாழ்ந்த முத்தமிழ் ஆசானாகிய
‘உய்யவந்தான்’ என்பவரின் மைந்தர் இவர் என்பதைச் சிறப்புப்பாயிரம்,

    உத்தமன் புளிங்குடி உய்யவந் தான்எனும்
    முத்தமிழ் ஆசான் மைந்தன்

என்று அறிவிக்கின்றது. புளியங்குடி என்பது திருநெல்வேலி மாவட்டத்தில்
உள்ளது.

     இவர் காலம் குலசேகர பாண்டியன் (1196-1266) அரசாண்ட காலம்
என்று சிறப்புப்பாயிரம் கூறுகின்றது.

     இவர் சமண சமயத்தவர், சிறப்புப்பாயிரம்,

    மாந்தரும் தேவரும் வாழ்த்திமுக் குடைக்கீழ்
    ஏந்தெழில் அரிமான் ஏந்துபொன் அணைமிசை
    மதிமூன்று கவிப்ப உதய மால்வரைக்