இவர் காலத்தில் திருவாரூரில் வாழ்ந்த வைத்தியநாத தேசிகர் இலக்கண விளக்கம் நூலும் உரையும் இயற்றினார். ஆழ்வார் திருநகரியில் வாழ்ந்த சுப்பிரமணிய தீட்சிதர் பிரயோக விவேகம் நூலும் உரையும் இயற்றினார். இச் செய்தியைச் சாமிநாததேசிகரே கூறியுள்ளார். ....என்கண் காணாத் திருவா ரூரில் திருக்கூட் டத்தில் இலக்கண விளக்கம் வகுத்துஉரை எழுதினன்; அன்றியும் தென்திசை ஆழ்வார் திருநகர் அப்பதி வாழும் சுப்பிர மணிய வேதியன், தமிழ்ப் பிரயோக விவேகம் உரைத்து உரை எழுதினான் என்று தம் நூலில் குறிப்பிடுகின்றார். நன்னூலுக்கு உரை இயற்றிய சங்கர நமசிவாயர் இவரிடம் கல்வி கற்ற மாணவர். நூலும் உரையும் இலக்கணக் கொத்து என்ற பெயரால் ஓர் இலக்கண நூலும் உரையும் இவர் இயற்றினார். நூலும் உரையும் பல அரிய இலக்கண ஆராய்ச்சிகள் நிரம்பியவை. “முன்னோர் நூல்களுள் வெள்ளிடை மலை போல விளங்கிக் கிடந்து பயன்படு விதிகள் அளவில்லை; அவற்றுள் இலைமறை காய்போலக் கரந்து கிடந்து பயன்படாதன சிலவற்றுள் சிறிது எடுத்து உரைத்தனன்” என்று இவர் கூறுகின்றார் (இலக்-7). சைவப்பற்று இவர் சைவசமயப்பற்று மிகுந்தவர். சைவசமய நூல்களைப் போற்றிப் புகழ்வார். சைவசமயம் பற்றிய உதாரணங்களைத் தருவார். பிற சமயத்தவர் இயற்றிய நூல்களைப் புறக்கணிப்பார். அவற்றைக் கற்பது கூடாது என்பார். “மாணிக்கவாசகர் அறிவால் சிவனே என்பது திண்ணம். அன்றியும், அழகிய திருச்சிற்றம்பலமுடையார் அவர் வாக்கில் கலந்திருந்து அருமைத் திருக்கையால் எழுதினார்” என்று போற்றி, மணிவாசகர் இயற்றிய திருக்கோவையாரைப் புகழ்கின்றார். “அப் பெருமையை நோக்காது சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, சங்கப்பாட்டு, கொங்குவேள் மாக்கதை முதலியவற்றோடு சேர்த்துச் செய்யுட்களோடு ஒன்றாக்குவர்” என்று கூறி ஏனைய நூல்களை விலக்குகின்றார். சைவசமயச் சார்பான நூல் |