பக்கம் எண் :

639ஆய்வு

களைக் கற்பதால் பெரும் பயன் விளையும் என்றும், பிற நூல்களைக் கற்பது
வீண் என்றும் தயங்காமல் கூறுகின்றார்:

     “இறையனார் அகப்பொருள் முதலான இலக்கணங்களையும், தேவாரம்,
திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரிய புராணம்,
சிவஞானபோதம், சிவஞான சித்தியார், சிவப்பிரகாசம், பட்டணத்துப்
பிள்ளையார் பாடல் முதலிய இலக்கியங்களையும் ஒரு பொருளாக எண்ணாது,
நன்னூல், சின்னூல், அகப்பொருள், காரிகை, அலங்காரம் முதலிய
இலக்கணங்களையும், பத்துப்பாட்டு, எட்டுத் தொகை, பதினெண்
கீழ்க்கணக்கு, இராமன் கதை, நளன் கதை, அரிச்சந்திரன் கதை முதலான
இலக்கியங்களையும் ஒரு பொருளாக எண்ணி வாணாள் கழிப்பர். அவர்
இவைகள் இருக்கவே அவைகளை விரும்புதல் என் எனின், பாற்கடலுள்
பிறந்து அதனுள் வாழும் மீன்கள் அப் பாலை விரும்பாது வேறு பலவற்றை
விரும்புதல்போல அவரது இயற்கை என்க.”

     சைவ சமய மாண்பை வெளிப்படுத்தும் பல உதாரணங்களை இவர் தம்
நூல் முழுதும் தருகின்றார்; அவற்றுள் சிலவற்றைக் கீழே காண்போம்:

     “அரியைப் படைத்தலால் அயன் கடவுள் என்றும், அயனைப்
பெற்றுக் காத்தலால் அரி கடவுள் என்றும் மாறுபட்டுழி, இவ் இருவரையும்
அழித்தலால் இவர் கடவுள் அல்லர். அரனே கடவுள்  என்பதுபோல”
(இலக்.-7).

    நாரா யணன்பூ ஓரா யிரத்தைக்
    கரத்தால் கொய்துஓர் அரற்கே கொடுத்துச்
    சக்கரச் சிறுமையின் நீங்கி, நற்சுவைப்
    பாற்கடற் கண்ணே பள்ளிகொண் டான்என,
    காரகம் முழுதும் வந்தன காண்க
    இவற்றுள் ஒன்றே இயம்பினும் காரகம்
                                       (இலக்-15)

    எண்ணா யிரவரைக் கழுவில் ஏற்றினார்
    ஆண்டவனைத் தூதாக அஞ்சாது நடத்தினார்
    அப்பர் தாம்கொண்ட விரதம் அழித்தனர்
    கடவுளை நாடொறும் கல்லால் எறிந்தனர்
    ஆண்டவன் தலையில் அடியால் மிதித்தனர்
    இவை தீவினை நல்வினை யாயின.
                                       (இலக்-81)