பக்கம் எண் :

655ஆய்வு

13

19-ஆம் நூற்றாண்டு உரையாசிரியர்கள்


சரவணப் பெருமாள் ஐயர்

    பத்தொன்பதாம் நூற்றாண்டு உரையாசிரியர்களில் புகழ் பெற்றவர்
சரவணப்பெருமாள்ஐயர். இவர் தொண்டை நாட்டில் உள்ள திருத்தணிகையில்
வீர சைவமரபில் கந்தப் பையரின் மகனாகத் தோன்றினார். இவர் இராமாநுச
கவிராயரிடம் கல்வி பயின்று புலமை பெற்றார். சென்னையில் தங்கிப் பல
ஆண்டுகள் தமிழ்ப்பணி புரிந்தார்.

     இவர் உரை இயற்றிய நூல்கள்: நாலடியார், நன்னூல், வெங்கைக்
கோவை, திருவள்ளுவமாலை, ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நறுந்தொகை,
மூதுரை, நன்னெறி என்பன.

     1830ஆம் ஆண்டில் திருக்குறள் பரிமேலழகர் உரைக்க விளக்கம்
எழுதிப் பதிப்பித்தார்.

     நைடதம் (கைக்கிளைப் படலம் வரை) பிரபுலிங்கலீலை (மாயை
உற்பத்தி வரை) ஆகிய இரு நூலுக்கும் உரை இயற்றத் தொடங்கி
முடிக்காமல் மறைந்தார். அவற்றின் பிற் பகுதிகளுக்கு இவரது மகன்
கந்தப்பையர் உரை எழுதி முடித்தார்.

திருவள்ளுவமாலை உரை

    சரவணப் பெருமாளையர் இயற்றிய திருவள்ளுவமாலை உரை, சிறந்த
ஆராய்ச்சியுரையாக உள்ளது. பாடல்களின் பலவகை நுட்பங்களை
எடுத்துக்காட்டி விளக்குகின்றது. இவ்வுரையையும் விளக்கத்தையும் பலர்
மேற்கொண்டனர்.

     இவ்வுரையிலும் சில திருத்தங்களைச் செய்ய வேண்டும் என்று
அறிஞர்கள் எடுத்துக்காட்டியுள்ளனர். டாக்டர் உ. வே. சாமிநாத ஐயர்,
“திருவள்ளுவமாலையில், ஆயிரத்து முந்நூற்று முப்பது அருங்குறளும்
என்னும் செய்யுளில் (16) உள்ள ‘வீற்றிருக்கலாம்’ என்ற சொல்லிற்கு ‘ஒரு
சபை நடுவிலே உயர்வாகிய ஆசனத்தில் ஏறியிருக்கலாம்’ என்று ஒருவர்
(சரவணப் பெருமாளையர்’ எழுதிவிட்டார். கவலையற்றிருக்கலாம் என்பதே