பக்கம் எண் :

663ஆய்வு

14

20-ஆம் நூற்றாண்டு உரையாசிரியர்கள்

     பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் தோன்றி இருபதாம்
நூற்றாண்டில் வாழ்ந்து தமிழ்ப்பணி புரிந்து மறைந்த உரையாசிரியர்கள்
சிலரைப் பற்றிக் கிடைக்கும் குறிப்புகளைத் கீழே காண்போம்:

பொன்னம்பல சுவாமிகள் (1832-1904)

    இவர், கைவல்ய நவநீதம், வேதாந்த சூடாமணி ஆகியவற்றிற்கு உரை
இயற்றியுள்ளார்.

திருமயிலை சண்முகம் பிள்ளை (1958-1905)

    இவர் கந்தபுராண வசனம் இயற்றினார். இவர் உரை கண்ட நுல்கள்:
அயோத்தியா காண்டம்; பொன்வண்ணத்தந்தாதி, திருக்கைலாய ஞானஉலா,
திருவாரூர் மும்மணிக் கோவை, பிச்சாடன நவமணி மாலை.

சிவசம்புப் புலவர் (19830-1909)

    இவர் மறைசை யந்தாதி, யாப்பருங்கலக் காரிகை, கந்தபுராணம்
(வள்ளியம்மை திருமணப் படலம் வரை) ஆகிய நூல்களுக்கு உரை
இயற்றினார். இவர் யாழ்ப்பாணப் புலவர்.

பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1862-1914)

    இவர் நற்றிணைக்கு உரை இயற்றியுள்ளார்.

பூவை. கலியாணசுந்தர முதலியார் (1854-1918)

    தாயுமானவர் தனிப்பாடல் திரட்டு உரையும், பட்டினத்தார் தனிப்பாடல்
திரட்டு உரையும் எழுதினார்.

வெ. குப்புசாமி ராசு (?-1921)

    சிவஞானபோத உரையும், ஞானவசிட்ட உரைநடையும் இயற்றினார்.