குமாரசுவாமிப் புலவர் (1854-1922) யாழ்ப்பாணத்துச் சுன்னாகம் இவரது பிறப்பிடம். இவர், திருக்காசைப் புராணப் பொழிப்புரை, யாப்பருங்கலக் காரிகைப் புத்துரை, திருவாதவூரர் புராணவுரை, அகப் பொருள் விளக்கப் புத்துரை, பாலகாண்டம் அரும்பதவுரை, நீதிநெறி விளக்கவுரை, தண்டியலங்காரவுரை ஆகியவற்றை இயற்றினார். ஆலாலசுந்தரம் பிள்ளை (1853-1923) இவர், பெரியபுராண விருத்தியுரை, காஞ்சி புராணவுரை, திருப்போரூர்ச் சந்நிதி முறை உரை, திருவுந்தியார் உரை, சிவஞான போதக் கருத்துரை ஆகியவற்றை இயற்றியுள்ளார். பானுகவியடிகள் (?-1926) கந்த புராணவுரை, திருவிளையாடல் புராண அரும்பதவுரை, மாகராசா துறவு உரை ஆகியவற்றை எழுதினார். வேலுப் பிள்ளை (1847-1930) வாதவூர்ப் புராணவுரை, புலியூர் அந்தாதியுரை, அபிராமி அந்தாதியுரை, கௌளிநூல் உரை ஆகியவை இவர் இயற்றியவை. கந்தசாமிக் கவிராயர் கம்பராமாயணம் ஆரணிய காண்டவுரை (1903), அரசன் சண்முகனார் இயற்றிய மாலை மாற்று மாலை உரை ஆகியவற்றை எழுதினார். டி. என். சேஷாசல ஐயர் (1891-1938) கம்பராமாயணவுரை, சூளாமணி உரை, நளவெண்பா உரை ஆகியவற்றை இவர் எழுதியுள்ளார். கா. ர. கோவிந்தராச முதலியார் (1872-1952) பன்னிரு பாட்டியலுக்கு இவர் உரை இயற்றினார். திருவளங்கம் இவர் கொழும்பில் வழக்கறிஞராக இருந்தவர். சிவஞான சித்தியார், கந்தர் அலங்காரம், சிவப்பிரகாசம், திருப்புகழ் ஆகியவற்றிக்கு உரை இயற்றியவர். சிவபாத சுந்தரனார் இவர் யாழ்ப்பாணத் தமிழர். திருவருட்பயனுக்கு உரை கண்டுள்ளார். |