குறுந்தொகை உரை குறுந்தொகையுரையில் ‘முளிதயிர் பிசைந்த’ என்னும் பாடலுக்கு (167) இவர் தரும் பொருள் பொருத்தமாக இல்லை. முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல் கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇ என்ற அடிகளுக்கு, “முற்றிய தயிரைப் பிசைந்த காந்தள் மலரைப் போன்ற மெல்லிய விரலைத் துடைத்துக் கொண்ட ஆடையைத் துவையாமல் உடுத்துக்கொண்டு” என்று பொருள் கூறுகின்றார். மறைமலை அடிகள் முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரையில் (1931, பக்கம்-10), மேலே காட்டிய வரிகளுக்கு, “வற்றக் காய்ச்சின கட்டித்தயிரைப் பிசைந்த காந்தள் மலர் முகிழ் போற் சிவந்த மெல்லிய விரல்களால், நன்கு கழுவி வெண்மையான உயர்ந்த ஆடை, சமையல் செய்யும் விரைவினால் இடுப்பினின்றும் அவிழ்ந்து கழல அதனைக் கை கழுவாமலே உடுத்திக் கொண்டு” என்று பொருள் உரைக்கின்றார். இப் பொருளே பொருத்தமாய் உள்ளது. குறுந்தொகை, உரையைப் பற்றி எஸ். வையாபுரிப் பிள்ளை பின்வருமாறு உரைக்கின்றார்: ‘இவர் தாமாக முழுப்பொறுப்பையும் ஏற்று நன்றாக உழைத்து வந்தது சுமார் 1930 வரை என்றுதான் சொல்லுதல் வேண்டும். இதற்குப்பின் தளர்ச்சி மேலீட்டினால் ஐயர் தமது சிஷ்யர்களையே முற்றும் நம்பிவிட வேண்டியதாயிற்று, இதனால் முன் பதிப்பித்த நூல்களின் செம்மைப் பாடு பின்வந்தவற்றுள் இல்லை. இதற்கு உதாரணமாகக் குறுந்தொகை பதிப்பைக் கூறலாம். இதன் கண்ணே பாட நிச்சயத்திலும், பொருள் உணர்ச்சியிலும் பிழைகள் பல உள்ளன என்பது தமிழறிஞர்கள் நன்கு உணர்ந்ததே.”* வை. மு. கோபால கிருஷ்ணமாச்சாரியார் இருபதாம் நூற்றாண்டு உரையாசிரியர்களில் இவர் மிகுதியான நூல்களுக்கு உரை இயற்றியவர். கல்லூரிகளிலும் உயர் நிலைப்பள்ளிகளிலும் பயிலும் மாணவர்களுக்குப் பல உரைகளை எழுதிவெளியிட்டார். இவரது உரையில் மிகுதியான வட சொற்கள் உள்ளன. இவர் விளக்கங்களை மிகுதியாக எழுதுவார். இவர் உரை இயற்றிய நூல்கள்: கம்பராமாயணம் (முழுவதும்), வில்லிபாரதம் (முழுவதும்), பத்துப் பாட்டு (தனித் * தமிழ்ச் சுடர் மணிகள் (1949) பக்கம் - 253. |