பரிமேலழகர் எழுதிய உரை, சுருக்கமாகவே உள்ளது. அக நானூற்றிற்குப் பழைய வுரை (90 பாடல்களுக்கு மட்டும்) குறிப்பு உரையாகவே உள்ளது. குறிப்புரை எழுதியவர்களின் ஊர் பேர் தெரியவில்லை. அவர்களைப் பற்றிய வரலாறு எதுவும் தெரியவில்லை. குறிப்புரைக்குத் தந்த முதன்மையை அவற்றை இயற்றியவர் பெயருக்கும் வரலாற்றுக்கும் தரவில்லை. புகழை விரும்பாத, பெயரையும் துறந்த பெரியவர்கள் அவர்கள்! காலம் செல்லச் செல்லக் கருத்துகள் வளர்ந்தன. குறிப்புரையுடன் முன்னோர் சொல்லிவந்த விளக்கம், மேற்கோள் ஆகியவை விரிவடைந்தன. அவற்றையும் ஏட்டில் எழுதும் நோக்கம் ஏற்பட்டது. விரிவுரையும் விளக்க வுரையும் தோன்றின. எடுத்துக்காட்டும் மேற்கோள் விளக்கமும் பெருகின. இவற்றைத் திறம்படக் கூறுவோர் இரண்டொருவரே இருந்தனர். அவர்களே அவற்றை ஏட்டில் எழுதிவைத்தனர். மயிலைநாதர், உரையின் பல்வேறு வகைகளை விளக்கியுள்ளார். “நூலுரை, உரைவிரி எனும் இவை, ஆறு தொடர்ச்சிப் பொருள் மயங்கிய ஒரு தொடர்த் தொகை மொழி. இவை, நூலை ஒக்கம் உரை நூற்கு உரை நூலது உரை நூற்கண் உரை நூலன்ன உரை நூலும் உரையும் என்றும், உரையை விரி உரைக்கு விரி உரையது விரி உரைக்கண் விரி உரைக்கும் விரி உரை விரியுடையது என்றும் வரும்” (நன்-372) என்னும் பகுதி உரைகளை விளக்குகின்றது. வலியவை வாழ்வுபெறல் முன்னோர் எழுதிய குறிப்பை மேற்கொண்டு புதிய கருத்துகளை அவற்றுடன் சேர்த்துப் பின் வந்தோர் தர, வாய்ப்பு ஏற்படுவது இயற்கையே. பின் தோன்றியவர்களுக்குப் பல வேறு |