பக்கம் எண் :

உரையாசிரியர்கள்682

     அடியார்க்கு நல்லார்: “முந்நீர் - கடல்; ஆகுபெயர். ஆற்றுநீர்
ஊற்றுநீர் மேனீர் என இவை என்பார்க்கு அற்றன்று; ஆற்று நீர் மேனீர்
ஆகலானும் இவ்விரண்டும் இல்வழி ஊற்று நீரும் இன்றாம் ஆதாலனும்
இவற்றை முந்நீர் என்றல் பொருந்தியது அன்று; முதிய நீர் எனின்,
‘நெடுங்கடலும் தன்னீர்மை குன்றும்’ என்பதனால் அதுவும் மேனீர் இன்றி
அமையாமையின் ஆகாது; ஆனால் முந்நீர்க்குப் பொருள் யாதோ எனின்,
முச்செய்கையை உடைய நீர் முந்நீர் என்பது; முச்செய்கை யாவன:

    மண்ணைப் படைத்தலும் மண்ணை அழித்தலும்
    மண்ணைக் காத்தலும் ஆம்.
                                   (சிலம்பு-17 உள்வரி - 3)

    நச்சினார்க்கினியர்: “நிலத்தைப் படைத்தலும் காத்தலும் அழித்தலும்
ஆகிய மூன்று தொழிலும் உடைமையின் முந்நீர் ஆகுபெயர் (மூதுரைக் - 75,
6).

கால - குருகு: இளம்பூரணர்

    தினைத்தா ளன்ன சிறுபசுங் கால
    ஒழுகுநீர் ஆரல் பார்க்கும்
    குருகும் உண்டுதான் மணந்த ஞான்றே
                                            (குறுந் - 25)

என்புழிச் ‘சிறுபசுங்கால’ என்று பன்மையாற் கூறி, பின்னைக் ‘குருகும்
உண்டு’ என்று ஒருமையாற் கூறுதல் வழுவாயிற்று; ஆயினும் அமைக என்பது.

பேராசிரியர்

    ‘உவவின நாண்மணி’ என்றது. “கால குருகு” என்பது போலப் பன்மை
ஒருமை மயக்கம் (திருக்கோவை - 108).

நச்சினார்க்கினியர்

    தினைத்தா ளன்ன சிறுபசுங் கால
    ஒழுகுநீர் ஆரல் பார்க்கும்
    குருகும் உண்டுதான் மணந்த ஞான்றே
                                            (குறுந் - 25)

எனப்பன்மை சுட்டிய பெயர்ச்சொல், ஒருமையோடு இயைபின்றி இயைதலின்,
வழுவாய் அமைவதூஉம் கொள்க. ‘குருகு’ என்பது இயற்பெயராதலின்,
அதன்கண் பன்மையோடு ‘கால’ என்பது இயைந்து, காலனவாகிய குருகுகள்
என நிற்பின், அஃது ‘உண்டு’ என்னும் ஒருமைக்கு ஏலாமையின், ‘குருகு’
என்பது ஒருமையாயே நின்றது ஆதலின், வழுவேயாம்; கள்வன்தான்
ஒருவனுமே; வேறு