சிலர் ஆண்டு ‘இல்லை’ என்று கூறுகின்றாள், ‘இரைதேரும் மனக் குறிப்பு உடைமையின் கேளாது; சிறிது கேட்டதாயினும் கொலைசூழ் குருகு ஆதலின், கூறுவதும் செய்யாது; இத்தன்மைத்து ஆயதோர் குருகும் உண்டு’ என்று கூறுதலின் உண்டு என்று ஒருமை வாசகத்தால் கூறினார் (சொல் - 461). சிவஞான முனிவர் “யாரும் இல்லை தானே கள்வன்” என்பதனுள் கால என்பது (போல மரபின என்பதும் மரபினை உடைய எனப்) பெயர் எச்சவினைக் குறிப்புச் சொல் என்றலும் ஒன்று. அற்றேல், கால என்புழி அகரம் பால்காட்டும் ஈறு என்றாற்படும் இழுக்கு என்னை எனின், அஃது உண்டு என்னும் ஒருமைச் சொல் கொண்டு முடிதலின் பால் வழுவாய் முடியும் என்க. இவ் உண்டு என்னும் சொல். ஐம்பால் மூவிடத்திற்கும் பொது அன்றோ எனின், அறியாது கடாயினாய்” என்று சிவஞானமுனிவர் வினா எழுப்பி, அதற்குத் தக்க விடைகூறி, உண்டு என்பதனை ஒருமைச் சொல்லே என்று நிலை நாட்டியபின், “அற்றேல், ‘கால - குருகு’ என்பது பன்மை ஒருமை மயக்கம் எனக் கோடும் எனின், அற்றன்று; “மாடமது வார்சடைய வள்ளலையும் ஒக்கும்” என உயர் திணைக்கண்ணும் பயின்று வருதலின், ஒரு காரணம் இன்றித் திணை மயங்குதல் பொருந்தாமையின் இன்னோ ரன்னவை எல்லாம் பெயரெச்சவினைக் குறிப்பே ஆம் என்க”. (சூத்தர விருத்தி) எச்சங்கள் எச்சங்களைப்பற்றி, உரையாசிரியர்கள் கொண்டுள்ள பலவேறு கருத்துக்களை, தமிழறிஞர் ஆர். வேங்கடாசலம் பிள்ளை கரந்தைக் கட்டுரைகள் என்னும் நூலில் (பக். 21-30) விரிவாகத் தந்துள்ளார். இலக்கணக் கொத்து உரையில் இலக்கணக் கொத்து உரை, சில நூற்பாக்களுக்கு ஏற்பட்டுள்ள பலவேறு உரை விளக்கங்களை எடுத்துக் காட்டுகின்றது (பாயிரவியல் - 6). நூலா சிரியர் கருத்தினை நோக்காது ஒருசூத் திரத்திற்கு ஒவ்வோர் ஆசிரியர் ஒவ்வொரு மதமாய் உரைவகுக் குவரே - பாயிரம் 6 |